பக்கம்:நெற்றிக்கண்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - I 67

காரணமாகச் செவி பொறுக்க முடியாத கட்டை ஒசையில் அது ஒலித்ததைக் கேட்டு - அந்த அபஸ்வரத்தைப் பொறுக்க முடியாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் புறப்பட்டிருந்தான் சுகுணன், வழக்கமாக இப்படிப்பட்ட நாட்களில் குழந்தையையும் கிள்ளி விட்டு விட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறவர்போல்-சர்மாவும் உடன் வந்து அநுதாபமாகப் பேசும் பாவனையில் அவன் வாயைக் கிளறுவது உண்டு. அவருடைய காலை மலர்தினசரிக்கு வெளியூர் எடிஷன் பேஜ் க்ளோஸிங் (தினசரிப் பத்திரிகையில் செய்திகளை ஒழுங்குப்படுத்திப் பிரசுரத்துக் குரியவற்றை முடிவாக நிர்ணயிக்கும் ஒரு நேரம்) ஐந்து மணிக்கு. சுகுணனோ மூன்று மூன்றரை மணிக்கே புறப் பட்டுவிட்டான். நாயருடைய மெட்ரோ பாலிடன் டைம்ஸ்' மூன்றரைக்கே தயாராகிவிடும். அது மாலைத் தினசரியாகையால் மூன்று மணிக்கே பேஜ்க்ளோ விங். எல்லாம் முடிந்துவிடும். அதனால் அவன் புறப்படும்போது உடன் புறப்பட்ட நாயர் காரியாலயத்தில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அநுபவங்கள் பற்றி அரைகுறையாகக் காதில் விழுந்ததாகவும் அவற்றிற்காகத் தாம் வருந்துவ தாகவும் சுருக்கமாகக் கூறினார். காரியாலய முகப்பி லிருந்து "கார் பார்க்கிங்" வரைதான் அவனோடுகூட நடந்து வந்தார் நாயர். அப்புறம் அவனையும் . காரிலேயே திருவல்லிக்கேணிவரை கொண்டுபோய் டிராப்' செய்து விட்டுப் போவதாக அவர் கூறியதை அவன் ஏற்கவில்லை. அவருடைய உதவிக்கு நன்றி கூறிவிட்டு நடந்தான் அவன் . அப்போது அவனுடைய மனத்தில் பல்லாயிரம் உணர்வுகள் குமுறிக் கொண்டிருந்தன. கிரியேடிவ் ரைட்டராகஅதாவது படைப்பிலக்கிய ஆசிரியனாக இருக்கிற ஒர். ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்டின் வாழ்வில் இப்படி எல்லாம் ஏற்படுவது இயல்புதான் என்று தோன்றியது அவனுக்கு. தாகசாமி ஏதாவது கூட்டத்தில் உளறினால்கூட அதை முதல் பக்கத்தில் எட்டுக்காலத் தலைப்புப்போட்டு வெளி, .யிடுவதன் மூலம் அவருடைய தயவைச் சம்பாதித்துவிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/169&oldid=590545" இலிருந்து மீள்விக்கப்பட்டது