பக்கம்:நெற்றிக்கண்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 15

யில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு அந்தத் திருமணத் திற்குப் போக அவனால் முடியாதுதான் போய்விட்டது.

உள்ளூரிலேயே இருந்து கொண்டும் அதற்குப் போகாம லிருந்திருக்க முடியும். ஆனால் ஏனோ அதையும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை. அவசர அவசரமாக எழும்பூர் இரயில் நிலையத்துக்கு ஓடிவந்து இரயில் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷங்களே இருக்கும் என்கிற சமயத்தில் எந்த நோக்கமும் எந்த அவசியமும் இல்லாமல் அந்த இரயில் நிற்கிற அந்தஸ்தும், டிராவலர்ஸ் பங்களாவும் இருக்கிற ஒரு குக்கிராமமாகத் தேடி ஞாபகத் துக்குக் கொணர்ந்து அந்த ஊருக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு இப்படி இங்கு வந்து சேர்ந்திருந்தான் சுகுனன்.

துளசியிடம் இவ்வளவு தாராளமாகப் பழகி இத்தனை துரம் மனத்தைப் பறிகொடுத்திருக்கக் கூடாதென்று இப் போது ஒரு விரக்தி ஞானம் அவனுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலான ஞானங்கள் நினைவின் மயானத்தில்-அது பாதிக்கப்பட்ட பிறகுதானே தோன்ற முடியும்? மனிதன் பாதிக்கப்பட்ட பிறகு தான் அவனுள் அசல் ஞானமே பிறக்க முடியும் போலிருக்கிறது. இடிந்து தரை மட்ட மாகிப்போன அரண்மனையில்-உடைந்த செங்கல்களுக் கிடையே ஒர் அர்சந்துளிரோ; அத்திக்கன்றோ, பசுந் தலையை நீட்டி மேலெழுவதுபோல் மனிதனுடைய ஞான மும் அவனுடைய நம்பிக்கையின் சிதைவுகளுக்கிடையே யிருந்து தான் தோன்றலாமோ என்னவோ?- என் றெண்ணி-இப்படி எண்ணுவதும் ஓர் அழுகுனித் தத்துவ மாகத் தோன்றி-உடனே-இவற்றையெல்லாம் மறக்கவும் முயன்றான் சுகுணன், ஒழுங்காக வரிசைப்படுத்தி நினைக்க வும் முடியாமல்-ஒழுங்காக வரிசைப்படுத்தி மறக்கவும். முடியாமல் அவன் மனத்தின் பலவீனமான எல்லையில் நினைவுகள் துடித்துத் தவித்துக் கொண்டிருந்தன் அப்போது. . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/17&oldid=590383" இலிருந்து மீள்விக்கப்பட்டது