பக்கம்:நெற்றிக்கண்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 68 - நெற்றிக் கண்

காலை மலர் சர்மாவைப் போலவோ, பிஸினஸ் லைக்' ஆகக் காலந்தள்ளும் டைம்ஸ்’ நாயரைப்போலவோ தன்னால் காலந்தள்ள முடியாதது சரி என்றே அவன் சிந்தனை சென்றது. அவர்கள் பத்திரிகையில் வெளியிட வேண்டியவற்றை டெலிபிரிண்டரும் நிருபர்களும் தந்தி களும் மொழி பெயர்ப்புக்களுமே அவர்களுக்குத் தந்து விடு: கின்றனர். நானோ எல்லாவற்றையுமே சிந்தித்துச் செய்ய வேண்டியிருக்கிறது. கருவிகளிலிருந்து முடிவை எதிர்பார்க் கிறவனுக்கும் மூளையிலிருந்து முடிவு செய்ய வேண்டிய வனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை இப்போது அவன் தெளிவாக உணர்ந்தான். புறப்படும்போது கீழே. விழுந்து உடைந்த மேஜை மணியின் ஞாபகம் வந்தது . அவனுக்கு. அந்த மணியின் நாதக் கட்டு அதை உடைத். ததும் எப்படிச் சீர்குலைந்து போய்விட்டதோ அப்படியே இந்தப் பத்திரிகைக் காரியாலய உறவும் இனிச் சீர்குலைந்து, போவதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. தன்மானத்தை மதிக்கத் தெரியாதவர்களை அவன் மதிக்க விரும்பவில்லை.

பத்திரிகைத் தொழில் விளக்குச் சுடரைப் போன்றது. எட்ட இருந்து அதைப் பார்க்கிறவரை ஒளிமயமாகவும், கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றும். அருகே நெருங் கினால் சுடும். அந்தச் சுடரிலேயே கலந்து விட்டாலோ விட்டிலைப் போல கருகி விழ வேண்டியது தான்' என்று: காலை மலர் சர்மா-அடிக்கடி ஓர் ஆஷாடபூதித் தத்து வத்தைச் சொல்லுவார். பத்திரிகைத் தொழிலுக்குப் புதிதாக எந்த இளைஞர்கள் வருவதும் சர்மாவுக்குப் பிடிக்காததாகையினால் அவர் எப்போதும் இப்படியே கூறுவது வழக்கம். - .

"நீங்கள் இந்தத் தொழிலிலேயே பழந்தின்று. கொட்டை போட்டு வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டே இப்படி மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வெட்கம்ா யில்லையா உங்களுக்கு? என்று சிரித்தபடியே அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/170&oldid=590546" இலிருந்து மீள்விக்கப்பட்டது