பக்கம்:நெற்றிக்கண்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - { {Ꮪ Ꮽ

மனத்தில் தைக்கும்படி அவரை அப்போதெல்லாம் எதிர்த்துக் கேட்டிருக்கிறான் சுகுணன். அதற்கு மறுமொழி கூறாமல் மெளனமாக அவனை ஏறிட்டுப்பார்த்தபடி சர்மா விஷமச் சிரிப்புச் சிரிப்பார். என்ன்ைப்போல் இப்படி இருந்தால் பத்திரிகைத் தொழிலில் வெற்றி பெறலாம் தான் என்று அவர் குறிப்பாகப் பதில்கூறுவது போன்ற மெளனமாக அதைச் சுகுணன் புரிந்து கொள்வதுண்டு. "எண்ணத்திற் பிறக்கும் எரியே சக்தி என்று பாரதி கூறி ஆயிருப்பது போல, மனத்திற்குள் சூடு சுரணை உள்ளவர்கள் .சர்மாவைப்போல் வாழ முடியாதென்பதையும் அவன் -உணர்ந்தான். தன் மானத்தை இழத்துகொண்டு உடலும் மனமும் கருகி வாழ்வதைவிடத் தன்மானத்தோடு மனம் கருகவிடாமல் தப்புவது நல்லதென்று தோன்றியது அவனுக்கு. மனமும் மானமும் கருகித்தான் சர்மாவைப். போன்றவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ரங்க பாஷ்யம், சர்மா போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக் காகப் பல ஈன்ச் செயல்களைச் செய்வதை அவன் அறிவான். நாகசாமி, ரங்கபாஷ்யம், காலை மலர் சர்மா ஆகியவர்கள் திடீர் திடீரென்று சந்திர கலசாபிஷேகம், ஸுப்ரபாத தரிசனம், புரட்டாசி சனிக்கிழமை என்று தங்களுக்கு வேண்டிய வேறு பத்திரிகை முதலாளிகள் சிலருடனும், விளம்பர ஏஜென்ஸி நிர்வாகிகளுடனும், நாலைந்து பெரிய பெரிய கார்களில் திருப்பதிக்குப் புறப்பட்டு போவார்கள். சென்னையிலுள்ள பணக்காரர்களுக்குத் திருப்பதி போவ தென்பது வீக் எண்ட் ரெக்ரியேஷன் மாதிரி என்று எண்ணி :யிருந்தான் சுகுணன்- நல்லெண்ணமும் கருணையுமில்லாமல் மனம் கருகிப் போனவர்கள் தெய்வ பக்தியுள்ளவர்களாக நடிக்க முயல்வது ஏன் என்பதை மட்டும் அவனால் விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. தீபாவளி மலர் போட்டால் கூட முதல் பிரதியை வெங்கடாசலபதி பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டுமென்று. எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்கள்-அந்த மலரை உழைத்துப் பாடுப்ட்டு மலரச்செய்த உதவியாசிரியனுக்கோ அச்சுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/171&oldid=590547" இலிருந்து மீள்விக்கப்பட்டது