பக்கம்:நெற்றிக்கண்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நெற்றிக் கண்

தொழிலாளிக்கோ நாலனா அதிகம் தரமறுக்கும் அளவு: கொடியவர்களாயிருக்கிறார்களே என்று சிந்தித்தால் இத்தனை பக்தியும் இத்தனை கொடுமையும் ஒரே மனத்தில் சேர்ந்து இருக்க முடியுமா என்பதுதான் அவன் சந்தேகம். ஒன்று பக்தி பொய்யாயிருக்க வேண்டும். அல்லது மற்றொன்று பொய்யாயிருக்கவேண்டும். மற்றொன்று: பொய்யில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பின்போ பக்தி தான் பொய்யாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு சமயம் காரியாலயக் கார் டிரைவர் ஒருவன் மூலம் சுகுணனுக்கு இந்தத் திருப்பதி மர்மம் விளங்கியது. அந்தக் கார் டிரைவர் சுகுணனின் எழுத்துக்களினாலே கவரப்பட்டு அவளிடம் பேரன்பு வைத்திருந்தான்.

'இது வேறே சங்கதிங்க் பக்திக்கும் இதுக்கும் சம்பந்: தமே இல்லை. பெங்களுர் போகிறோம்’-'திருவனந்தபுரம் போகிறோம் னு புறப்பட்டா-இவங்க அங்கே எதுக்காகப் போறாங்கன்னு கேட்கிறவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். "திருப்பதி போறோம் னு சொன்னா அப்பிடிச் சந்தேகம் எதுவுமே வராதுங்க. அந்தப் புனிதப் பேருக்கு அப்பிடி ஒரு சக்தி ஏற்பட்டுப் போயிடிச்சு, அந்தப் பேரைப் போர்வையாய்ப் போர்த்திக்கிட்டுப் போயி-எங்க, போனாலும் இவங்க வழக்கமாப் பண் ணக்கூடிய அட்டுழி யங்களைப் பண்ணிட்டு வர்ரத்துக்கு வசதியாயிருக்குங்க. கம்பெனிகளின் விளம்பர நிர்வாகிகளை-அவர்கள் தங்கள் பத்திரிகைக்கே நிறைய விளம்பரங்களைக் கொடுக்கவேண்டு மென்பதற்காகத் தண்ணீர்-தெளிச்சுப் போகபோக்கியங் களில் குளிப்பாட்டிக் கொண்டேயிருப்பார் நாகசாமி. அந்த விளம்பர நிர்வாகிகளையும், தனக்குப் பயன்படக் கூடிய மத்தவங்களையும் திருப்பதி மாதிரிப் புண்ணிய rேத்திரங்களுக்கு அழைத்துப்போய் அவங்களோடு இரண்டு. மூன்று நாட்கள் குளிக்காமல், பல் தேய்க்காமல் உட்கார்ந்து சீட்டாடுவதும், குடிப்பதும் வேறு கேளிக்கைகளுக்கு. ஏற்பாடு செய்து கொடுப்பதுமாக எல்லாம் நடக்குமுங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/172&oldid=590548" இலிருந்து மீள்விக்கப்பட்டது