பக்கம்:நெற்றிக்கண்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நெற்றிக் கண்

வேண்டும் என்றும் அவன் பலமுறை திட்டமிட்டும் அப்படிப் போய்வர முடியாமல் தட்டிக்கொண்டே இருந்தது. தங்கையைப் பார்த்துவர ஆவலிருந்தும் அவகாசமில்லா திருந்தது. -

இப்போது பூம்பொழில் காரியாலய வேலையை விட்டு விடலாமென்ற தீர்மானத்துக்கு வந்ததும்-விட்டு விடுதலை யாகிச் சிட்டுக் குருவியைப்போல்-வெளியேறலாமென்ற அந்த மனநிலையில்-உடனே தங்கையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. ‘இன்றிரவு அல்லது நாளைக் காலையில் ஒய்வாக உட்கார்ந்து நாகசாமிக்கு ஒரு கடிதம் எழுதி அதோடு தன் இராஜினாமா வையும் அனுப்பி விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். காரியாலயத்திலிருந்து வெளியேறி மெயின் ரோடுக்கு வந்து பஸ் பிடித்துத் திருவல்லிக்கேணியில் அறைக்கு வந்து சேருகிறவரை-இப்படிப் பல நினைவுகள் ஓடின. அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்தபோது அந்தப் பாலக்காட்டுப் பெண் கமலம் அங்கே அவனை எதிர் பார்த்துக் காத்திருந்தாள். - - 'ஊரிலிருந்து கொஞ்சம் பணம் மணியார்டர் வந்தது. உங்களுக்கு நான் தரவேண்டிய இருநூறு ரூபாயில் நூறு: இப்போது கொடுத்து விடுகிறேன் அண்ணா. - என்று சிரித்துக் கொண்டிே ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்தாள் கமலம். அப்போதிருந்த மனநிலையில் அந்தப் பெண் அண்ணா” என்று கனிவாக அழைத்த பாசமும் உறவும் அவனுக்கு மிகவும் இதமாயிருந்தது. அநுபவங் களால் ஏற்படும் கசப்புகள் உறவுகளால் ஏற்படும் உரிமை களால் மாறுவதும் வாழ்விலுள்ள ஒரு நன்மையாகத் தோன்றியது. சில நாட்களுக்கு முன் காரியாலயத்துக்குத் தேடிவந்து அவள் தன்னிடம் - பணம் வாங்கிக் கொண்டு போனதைத் தன்னுடைய பல வேலை களுக்கு நடுவே அவன் மறந்திருந்தான். இவ்வளவு விரைவில் அந்த மாணவி தன்னிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வருவாள் என்பதையும் அவன் எதிர்பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/176&oldid=590552" இலிருந்து மீள்விக்கப்பட்டது