பக்கம்:நெற்றிக்கண்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 薰75

வில்லை. தன்னுடைய மனத்தின் உள் வேதனைகளை மறைத்துக்கொண்டு அவளிடம் பேசலானான் அவன். ஆயினும் எப்படியோ அந்தப் பெண் அவனுடைய முகத்தி லிருந்தே அதைக் கண்டுபிடித்து விட்டாள் போலிருக்கிறது. "ஏன் அண்ணா என்னவோ போலிருக்கிறீர்கள்? உடம்புக்குச் செளகரியமில்லையா? என்றே அவனைக் கேட்டுவிட்டாள் அவள். நம் மனத்தை எப்போது நாம் அதிகமாக ஒளிக்க முயலுகிறோமோ அப்போதுதான் அது மற்றவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது என்று தோன்றியது சுகுணனுக்கு. -

அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலை அதிகம். அலைச்சலும் கொஞ்சம் அதிகம்' என்று சுகுணன் அவளுக்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டான். கண்ணப்பா லாட்ஜ் பையனிடம் சொல்லி காபி வர வழைத்துக் கமலத்துக்குப் கொடுத்தான் அவன்.

"இங்கே மட்டும் ஸ்டவ்வும் பாத்திரமும் மற்ற வசதி களும் இருந்ததோ நானே ஒரு நொடியில் உங்களுக்கு அருமையான காபி தயார் செய்து கொடுத்து விடுவேன் அண்ணா என்றாள் கமலம். சமூகத்தின் எந்த மூலையி லிருந்தாவது உண்மையை எதிர்த்து உக்கிரமாகத் திறக்கும் நெற்றிக்கண்ணின் வெப்ப மிகுதியை இப்படி ஒரு சிறிய கருணையும் பாசமும்கூடக் குளிர்க்க முடியுமென்று அவன்

எதிர்பார்த்திருந்தது கிடையாது. கமலம் அவனிடம் சிறிது

நேரம் பேசிக்கொண்டிருந்தபின் ஒரு வாரங் கழித்து.

மறுபடி வந்து பார்ப்பதாகக் கூறி விடை பெற்றுக்

கொண்டு புறப்பட்டாள். . -

"இங்கே அறையிலேயே வந்து பாருங்கள்! பூம்பொழில் .

காரியாலயத்தில் வேண்டாம்'- என்று பொதுவாக

அவளிடம் கூறி அனுப்பினான் அவன். கமலம் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றபோது மாலை ஐந்தரை

மணிக்கு மேலாகியிருந்தது. திருவல்லிக்கேணி பெரியதெரு. என்ற குறுகலான தெருவிலே ஜனவெள்ளம் அலை அலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/177&oldid=590553" இலிருந்து மீள்விக்கப்பட்டது