பக்கம்:நெற்றிக்கண்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17s - நெற்றிக் கண்

...களை விட்டுக் கொடுத்துத் தன்னம்பிக்கையைப் போற்று வதற்காக நேஷனல் டைம்ஸ் - என்ற இலட்சிய இயக்கத்

தில் தானே முழுமையாக இறங்கியிருந்தார்.

சகுணன் அவருடைய காரியாலயத்துக்குப்போய்ச் சேர்ந்தபோது டெலிபிரிண்டரில் வந்திருந்த தந்தி ஒன்றைத் தயாரித்துத் தலைப்புக் கொடுத்து உள்ளூர்ப் பதிப்புக்காகச் செய்தியாக்கிக் கொண்டிருந்தார் அவர். அந்தக் காரியத் தில் சிறிதுநேரம் அவருக்கு உதவி செய்தான் சுகுணன். பின்பு பொதுவாக இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டி ருந்தார்கள். பேச்சினிடையே, "பூம்பொழிலை விட்டு நான் விலகிவிடப் போகிறேன் சார்' என்று சுகுணன் அவரிடம் கூற நேர்ந்தது. அவர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு விளவினார்: ' ;

ஏன்? என்ன காரணம்?'

'காரணம் ஒன்றில்லை. எத்தனையோ இருக்கிறது’ எதைக் கேட்டாலும், நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்ய வேண்டும்-என்று புத்தியைச் சம்பளத்துக்கு அடகு பிடிப்பது போன்ற தொனியில் பேசு கிறார் நாகசாமி. ரீடிங் மேட்டருக்கு (படிக்கிற விஷயங் கள்) நடுவில் விளம்பரங்கள் போடவேண்டும் என்பதற்குப் பதில்-விளம்பரங்களுக்கு நல்ல இடம் போக மீதி உள்ள பக்கங்களில் எதையாவது போட்டுக்கொண்டு தொலையுங் கள்-என்பதுபோல் பேசுகிறார்கள். அதைப் பற்றி விவாதித்தால் கதை கட்டுரை முதலிய "ரீடிங் மேட்டர் களுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர் களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள் - என்று குதர்க்கம் செய்கிறார்கள்.' ... - - .

தெருச்சுவராயிருந்தால் முழுக்க முழுக்க விளம்பரமே ஒட்டிவிடலாம். பத்திரிகையாச்சே? நடு நடுவே படிக்கவும் ஏதாவது இருந்தாலல்லவா தெருச்சுவருக்குப் பத்திரி:ை கும் கவுரமான கண்ணியமான வித்தியாசம் ஒன்று இருக்க முடியும்?' . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/180&oldid=590556" இலிருந்து மீள்விக்கப்பட்டது