பக்கம்:நெற்றிக்கண்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 179

நீங்கள் சொல்வதுதான் சரி என்று எனக்குப் படுகிறது சார்! ஆனால் அவர்கள் அப்படி ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லையே? சுவரில் ஒட்டுகிற விளம்பரங்களை அப்படி ஒட்டாமல் பின் அடித்துப் புத்தகமாகப் பைண்டு செய்தால் போதுமென்று நினைக்கிறார்களே?'

"அப்படியானால் சிரமம்தான்! குடிசைத் தொழில் போல் குத்து விளக்குப்போல் - பத்திகையாளர்களாகிய உங்கள் மனத்திலும் என் மனத்திலும் சுடர் விடுகிறதே ஒரு-மூல அக்கினி-அந்த அக்கினிதான்-இந்தத் தொழி லின் பத்தினித் தன்மையை வியாபாரிகளிடமிருந்து என்றும் தனியே பிரித்துக் காக்க முடியும் சுகுணன்!” -

மகாதேவனிடம் காரியாலய நிகழ்ச்சிகளை எல்லாம் மனம் திறந்து கூறினான் சுகுணன். எல்லாவற்றையும் ஆதரவாகவும் - அதுதாபத்தோடும் பொறுமையாகக் கேட்டார் அவர். - -

இந்த தேசத்தில் உள்ள பொதுவான கஷ்டம் இது! ஒவ்வொரு நல்ல தொழிலும் அது வளர்ந்து பலன் தருகிற நிலையில் பணம் பண்ணும் ஆசை மட்டுமே உள்ள சில வெறும் வியாபாரிகளிடம் போய்ச் சிக்கிவிடுகிறது’’-என்று கூறிப் பெருமூச்சுவிட்டார் தியாகி மகாதேவன்,

'பத்திரிகைக்கு முதல் போடுகிறவர்கள் நாளடைவில் வெறும் "புரோக்கர்கள் போல் மாறி விடுகிறார்கள். பம்பாயிலிருக்கிற ஒரு கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜரின் மனைவிக்குக் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பிடிக்கிறதென்று தெரிந்தால் இங்கிருந்து விமானத்தில் பட்டுபுடவையை வாங்கிக் கொடுத்து அனுப்பி அவரைத் தன்னக் கட்டுவதிலுள்ள சிரத்தை-பத்திரிகையின் மற்ற விஷயங்களில் இவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது’ பத்திரிகைகளில் படிகிறவர்கள் சார்! படிக்கிறவர்களும் விளம்பரதாரர்களும் பத்திரிகைகளை நாடும்போது அவற்றில் வெளி வருகிற விஷயங்களின் தரத்தை நிறுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/181&oldid=590557" இலிருந்து மீள்விக்கப்பட்டது