பக்கம்:நெற்றிக்கண்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 81

களிடம் சொல்லி பி.டி.ஐ , நேபன் எங்காவது இடமிருக் கிறதா என்று விசாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் பல பெரிய பெரிய பத்திரிகை முதலாளிகளிடம் இருந்து அவர்கள் நம்மை ஆட்டிப் படைக்கிற வேதனை பொறுக்க முடியாமல்தான் நானே சுதந்திரப் பறவையானேன். அதனால் என் நண்பர்களுக்கு இப்படி நிலையில் 'உத்தி யோகத்தைக் காப்பாற்றிக் கொளளுங்கள்-என்பதுபோல் ஒருபோதும் நான் அறிவுரை கூறுவதே இல்லை. பத்திரிகை யாளனின் ஒரே ஆயுதம் நியாயமான தைரியம். நிர்வாகத் துக்குப் பயந்து கொண்டே அந்த ஆயுதத்தை அவன் பிரயோகிக்க முடியாதென்பதுதான் என் கருத்து...'

பத்தாவது அத்தியாயம்

வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் காட்சியாக கிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லை.

'பத்திரிகையாளன் என்ற தகுதிக்குக் காரணமான

துணிவு எதுவோ அது தொழில் பயத்தில் அவிந்து போகும். எனவே சொகுசு நாடும் தொழில் பயந்தாங்கொள்ளிகள்" யாராயிருந்தாலும் அவர்கள் தைரியமேயின்றிப் பத்திரிகைத் தொழில் என்ற போர்க்களத்துக்கு வரக்கூடாது' என்றார் மகாதேவன். - -

"அந்தத் தைரியத்துக்கு "நக்கீர தைரியம்’ என்று பெயர் சூட்டலாமென்று என்க்குத் தோன்றுகிறது. சார்! ஏனென்றால் சமூக வாழ்வில் நியாயமான தைரியத்தோடு எழுந்து நின்று பொய்யையோ, குற்றத்தையோ சாடுகிற ஒவ்வொருவனையும் வெதும்புவதற்கு எந்த மூலைவி விருந்து எப்படிப்பட்ட கொடிய நெற்றிக் கண்கள் திறக்கும். என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாமலிருக்கிறது"

நெ-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/183&oldid=590559" இலிருந்து மீள்விக்கப்பட்டது