பக்கம்:நெற்றிக்கண்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

及84 நெற்றிக் கண்

தோடும், கையில் பணமே இல்லாத பேய்வறுமையோடும், வேறு வழியில்லாத காரணத்தால் தம்புச் செட்டித் தெரு. விலிருந்து இரவு பத்தரை மணிக்குமேல் இந்தப் பாதை யாகத் திருவல்லிக்கேணிக்கு நடந்துபோகும் போதுஎக்தனையோமுறை இந்தக் குதிரை வீரனின் சிலையிலிருந்து என் வாழ்க்கைத் தத்துவங்களைத் தேடியிருக்கிறேன் நான். நாம் நடந்தால் இந்தக் குதிரையும் அந்தரத்தில் உயிரி பெற்று வேகமாக நகர்வது போலிருக்கும். நான் நின்றாலோ இதுவும் சிலையாகிவிடும். கையில் வசதியோடு நாம் வேக. மாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஒடியாடி அலைந்து கொண்டிருக்கும்போது-இந்தச் சிலை போலவே பட்டினம். முழுவதும் உற்சாகமாக ஒடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கிமலைத்து நிற்கிறபோது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப் பட்டுவிட்டதுபோல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஒடுகிற சிலை இது. நான் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான். பட்டினத்தின் வாழ்க்கைத் தத்துவ இரசியம்ஞான சூசனை-இந்தச் சிலையில் மறைந்திருப்பதாக எனக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனமான அங்கீகாரம் உண்டு சுகுணன்'-என்றார் மகாதேவன். அவர் கூறிய படியே பார்க்கிறவர் நின்றால் சிலையும் நிற்பதையும் பார்க்கிறவர் நடந்தால் சிலையும் நகர்வதுபோல் தோன்று.

வதையும் சுகுணன் அப்போது கூர்ந்து உணர்ந்தான்.

"இந்தச் சிலையை அமைத்த சிற்பியைவிடப் பட்டினத்து. னாழ்வுக்கு இங்கிதமாக ஞானம் சொல்லிக் கொடுப்பவன். வேறு யாரும் இல்லை' என்றார் மகாதேவன். -

"உண்மைதான்!” என்று கூறி நெட்டுயிர்த்தான் சுகுணன். மீண்டும் நடந்தார்கள் அவர்கள், பைகிராப்ட்ஸ் ரோடு மூலையில் அவர்கள் வேறு வேறு திசைகளில் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தார்கள். அறைக்குப் படியேறிய: சுகுணனைப் படியிலேயே ஒடி வந்து எதிர்கொண்ட 1ல்ாட்ஜ் பையன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/186&oldid=590563" இலிருந்து மீள்விக்கப்பட்டது