பக்கம்:நெற்றிக்கண்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 185

'இன்னிக்குப் பார்த்து எங்க போயிட்டீங்க......சார்? உங்களுக்கு டிரங்க்கால் வந்திருந்தது. ரெண்டு க94 கூப்பிட்டுட்டாங்க. பெண்டிங் லே வச்சிருக்கேன். வந்து பேசுங்க...'-என்றான். பையன் கூறியதைக் கேட்டுச் சுகுணன் எந்த விதமான பரபரப்பும் அடையவில்?ை. தனக்கு எந்த ஊரிலிருந்தும், யாரிடமிருந்தும், டிரங்கா' வந்திருக்க முடியுமென்பதை அவன் நம்பவில்லை. வேறு யாருக்காவது வந்த டிரங்காலைத் தவறுதலாகத் தெரிவிக் கிறார்களோ என்றுதான் முதலில் எண்ணினான். *கண்ணப்பா லாட்ஜ் - பையனோ, 'உங்களுக்குத்தான் சார்?... சந்தேகமே இல்லை"- என்று நிச்சயமாகச் சொன்னான். உடனே சுகுனன் டெலிபோனை எடுத்து டயல் செய்து டிரங்க்-என்குயரீலை’க் கூப்பிட்டு விசாரித் தான். விசாரித்த பின்போ பையன் கூறியதுதான் உண்மை என்று தெரிந்தது. டில்லியிலிருந்து அவனுக்கு டிரங்க்கால்'. வந்திருப்பதாகவும்-மறுபடி இன்னும் சிறுது நேரத்தில் கூப்பிடுவதாகவும்-வெளியூர் டெலிபோன்கள் பற்றிய விசாரணைப் பிரிவிலிருந்த பெண் தெரிவித்தாள்.

'டில்லியிலிருந்து துளசியைத் தவிர வேறு யார் தன்னைக் கூப்பிட முடியும்'-என்று சிந்தித்தபோது ஒரு வேளை-பத்திரிகையாளர் வேஜ் போர்டு (சம்பள விகிதம்) கூட்ட சம்பந்தமாகவோ, பெட்ரேஷன் கட்டத்திந் காகவோ கோஷ் டெல்லி செல்ல நேர்ந்து அங்கிருந்து கூப்பிடுகிறாரோ என்றும் தோன்றியது அவனுக்கு. டில்லியி லுள்ள இரண்டொரு பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவும் அவனுள் எழுந்ததாயினும் தொலை பேசியில் கூப்பிடுகிற அளவு தனக்கும் அவர்களுக்கும் இடையே எந்த அவசரமும் அவசியமும் இல்லையென்றும் தோன்றியது. சிந்தனையில் இப்படிப் பலவிதமாகக் குழம்பிய பின் டில்லியிலிருந்து கூப்பிடும் கட்டுப்படுத்த முடியாத இந்த ஆவல் துளசியினுடையதாகத்தான் இருக்க முடியுமென்று'- அவனே தனக்குள் ஒரு முடிவுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/187&oldid=590564" இலிருந்து மீள்விக்கப்பட்டது