பக்கம்:நெற்றிக்கண்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘186 நெற்றிக் கண்

வந்தான். டெலிபோன்’ விஷயத்தில் நாகசாமியைப் போலவே அவர் மகளும் இருப்பதை எண்ணி உள்ளுறச் சிரிப்பு வந்தது அவனுக்கு. நாகசாமி ஒரு டெலிபோன் வெறியர். அதாவது குறைந்த பட்சம் நாள் ஒன்றிற்கு முப்பது டிரங்க்கால் களாவது போட்டுப் பேசுவார். ஒரு காரியமாவது "டிரங்க்காவில் பேசி முடிக்க வேண்டிய. அவசரக் காரியமாக இராது. தபால் கார்டில் எழுதிப் போட்டாலும் நடந்துவிடக்கூடிய காரியத்துக்குக் கூட "டிரங்க்கால்'தான் அவருக்கு நாலு கூடை மாவடு, ஊறு காய்க்காக அனுப்பி வைக்க வேண்டுமென்று-மாயவரத்தி லுள்ள ஒரு நண்பருக்குத் திடீரென்று அர்ஜெண்டாக ஃபோன் செய்வார். இரண்டு டஜன் காபூல் மாதுளை வாங்கி இரவு விமானத்தில் கொடுத்தனுப்ப வேண்டுமென்று டெல்லிக்கு யாருக்காவது டிரங்க்கால் செய்வார். அதே சமயத்தில் மாருதி குரூப் வெளியீடுகளைச் சேர்ந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் சர்க்குலேஷன் நிர்வாகி, சப்ஸ்கிரிப்ஷ்ன் நிர்வாகி, முதலியவர்களுக்குச் சிக்கனமாக ஆபீஸ் நடத்த வேண்டும்’-என்று உபதேசம் செய்யும். போதோ, கூடியவரை எல்லாம் போஸ்ட் கார்டிலேயே எழுதுங்கள். தபால் செலவு நிறைய ஆகக்கூடாது- என்று. அடித்துச் சொல்வார். அவரைப் பற்றி நினைத்து இப்படி அவன் உள்ளுரச் சிரித்துக் கொண்டிருந்தபோது டெலி போன் மணி அடிக்கலாயிற்று. டெலிபோனை எடுத்தான் அவன். டெலிபோன் இலாகா பெண்மணி விவரம், சொல்லிய பின் எதிர்ப்புறமிருந்த துளசியின் குரல்தான் மங்கலாக ஒலித்தது. - - -

கம்பெனி வேலையாக அவர் ஜெய்ப்பூர் போயிருக்க கிறார். நான்தான் வீட்டில் தனியாக இருக்கேன். பொழுதே. போகவில்லை. சாயங்காலம் அப்பாவுக்கு டிரங்க்கால்’

போட்டுப் பேசினேன். எப்போது யாரிடம் எதைப் பற்றிப்

பேசினாலும் என் ஞாபகம் உங்களைச் சுற்றித்தான் இருக்கு. என்னாலே உங்களையோ, உங்களைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/188&oldid=590565" இலிருந்து மீள்விக்கப்பட்டது