பக்கம்:நெற்றிக்கண்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 17

மனத்தில் கரைவது போல் நெகிழ்ந்திருந்த சமயத்தில் ஒரு நாள், '"துளசி நீ ஒரு மாலை...' என்று அவன் உணர்ச்சி மேலிட்டு அவளைப் பாராட்டினான்.

'இந்த வீரரின் அழகிய கம்பீரமான புஜங்கள்ை இப்படி அலங்கரிக்க முடியுமானால் நான் மாலையாக இருப்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை' -என்று அவள் அன்று அதற்கு மறுமொழி கூறியிருந் தாள .

ஒருவர் மனதில் மற்றவர் மனம் கரைய-ஒருவர் நினைவில் மற்றவர் நினைவு பதிய, ஒருவர் உணர்வில் மற்றவர் உணர்வு சேர-சோர-அவர்கள் பழகிய நாட்கள் பல. பழகிய விதங்கள் பல. அவள் ஓர் அபூர்வமான அழகி. கண்களால் சிரிப்பாள். கன்னத்தில் தகை பூக்கும். இதழ்களால் காணுவாள். விழிகளால் உண்ணுவாள். கைகளால் பேசி உணருவாள். மனத்துக்கு நயமான வாத்தியத்தை எடுத்து நாமே விரும்பி வாசிப்பதுபோல் அவளோடு பேசுவதே ஒரு சுகமான அனுபவமாகும். அத்தகையவளை இன்று உணர்ச்சி பூர்வமாக மற்றொரு வனிடம் இழந்து நஷ்டப்பட்டது அவனுக்குப் பேரிழப்புத் தான். ஆனால் இந்த நஷ்டம்கூடத் தன்னை இன்னும் தீரனாக மாற்ற முடியுமோ என்பதாகவும் ஓர் அந்தரங்கத் துடிப்பு அவனுள் இருந்தது. பொற்கிண்ணத்தில் ஒளி நிழல் படிவது போல் முகம் முழுவதும் குறுகுறுவெனச் சிரிக்கும். அவள் அழகு அவனை ஏமாற்றி விட்டு போனதே அவனுக்கு இனி ஒரு பெரிய தூண்டுதலாகவும் செய்யலாம்.

அரைத்தால், நசுக்கி வழித்தெடுத்தால் வாசனை பிறப்பிக்கிற சந்தனக் கட்டையைப்போல் கலைஞனுடைய மனத்தை அலைத்தாலோ அரைத்தாலோ அந்த வேதனை யும் ஒரு கலைத்தன்மையைத்தானே பிறப்பிக்கும்? கலைஞ. னுடைய துக்கத்துக்கும் கூடக் கலைமதிப்பு உண்டு. தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/19&oldid=590385" இலிருந்து மீள்விக்கப்பட்டது