பக்கம்:நெற்றிக்கண்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நெற்றிக் கண்

(விரிவு) செய்யுங்கள்-என்று வேண்டிக்கொள்ளும் துளசி யின் குரலும் டெவிபோனில் கேட்டது.

'அப்பா முன்கோபக்காரர்தான். ஆனால் உங்களை தினைத்தால்தான் எனக்குப் பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது." -

'எனக்காக நான் கவலைப்படுவதையே விரும்பாதவன் தான். நீ கவலைப்படுவது அநாவசியம். ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவது தவிர்க்க முடியாத-அதே சமயத் தில் சொல்லாகவும் வெளிப்படாத வெறும் நெஞ்சின் சாட்சி. வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லே...' *

பயனுமில்லே...'

இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லையே? பல விஷயங் களில் நெஞ்சுக்கு நெஞ்சு சாட்சியாக மட்டுமே நின்றிருக் கிறோம் நாம்-'

"இருக்கலாம்! ஆனால், இன்று அதை எண்ணி என்ன ஆகப்போகிறது. துளசி?' - "ஆயிரம் மைல்களுக்கும் அப்பாலிருந்து உங்களையே தினைந்து கவலையால் உருகிக் கூப்பிடுகிறேன் நான். பேச்சி னால் என்னைச் சித்ரவதை செய்கிறீர்கள் நீங்கள்..."

அவளுடைய இந்தச் சொற்கள் அழுகை தோய்ந்த குரலில் ஒலித்ததைக் கேட்டபோது சுகுணனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது.

நான் இலக்கிய சேவை செய்ய ஆசைப்படுகிறேன். உன் தந்தையோ வெறும் காகித வியாபாரம் செய்ய ஆசைப்படுகிறார். கேட்பார் பேச்சக்கு வசப்படுகிற கெட்ட குணமும் அவரிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலை வில் எனக்கும் அவருக்கும் இனி எப்படி ஒத்துவரும்?"

"'உங்களுடைய சக்திவாய்ந்த எழுத்துக்களாலும் சிந்தனைவளம் மிகுந்த நாவல்களாலும் பூம்பொழிலுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/190&oldid=590567" இலிருந்து மீள்விக்கப்பட்டது