பக்கம்:நெற்றிக்கண்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 189

பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தேடிக் கொடுத்த

நீங்கள் அதை விட்டு விட்டு வெளியேறலாமா?"

"வேறு வழி இல்லை! வெறும் அதிகாரத்துக்குக் கட்டுப் பட்டுச் சம்பளம் பெறும் கூவியாக இன்னும் சிறிது காலம் நான் அங்கே தாமதித்தாலும் எந்த எழுத்தின் சக்தியை நீ இப்போது ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து புகழ் கிறாயோ அந்த எழுத்தின் சக்தியையே நான் இழக்க நேரிட்டு விடும் போலிருக்கிறது.' -

"எதையும் திர யோசித்துச் செய்யுங்கள்...' . 'இதைச் செய்த பிறகு இனி நாளை வேறென்ன செய்யலாம் என்பதைத்தான் இனிமேல் தீர யோசிக்க வேண்டுமே ஒழிய-இதில் திரவோ யோசிக்கவோ-இனி

ஒன்றுமில்லை...'

'நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது! என்னைக் கவலைப்பட்டு அழிய விடாதீர்கள்...'

மறுபடியும் மூன்று நிமிடம் முடியப் போவதற்கான அடையாள ஒலி டெலிபோனில் குறுக்கிட்டது. பரபரப் போடு மேலும் மூன்று நிமிடம் எக்ஸ்டெண்ட் செய்ய வேண்டித் துளசி கெஞ்சினாள். பின்னால் நிறையக் கால்’ கள் இருப்பதால் மேலும் நீடிப்பது சாத்தியமில்லை என்று கண்டிப்பாகக் கூறி லயனைக் கட்' செய்துவிட்டாள் டெலிபோன் இலாகா பெண்மணி. மனத்தினுள் ஏதோ ஒர் அரை குறை உணர்வோடும்-ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தவிக்கும் ஓர் அன்பு உள்ளத்துக்காக உள்ளுருகும் வேதனையோடும் டெலிபோனை வைத்தான் சுகுணன். இந்தத் தகவலை இவ்வளவு விரைவாகத் துளசி அறிவதற்கு ஒரு வாய்ப்பு நேரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தன்மேல் அவளுக்கிருக்கும் அக்கறையினாலும் ஆர்வத்தினா லும் மறுபடியும் டெல்லியிலிருந்து ஓர் அவசர டிரங்க்கால்' -புக் செய்து பாதியில் நின்ற பேச்சைத் தொடருவாளோ என்ற பிரமையில் சிறிது நேரம் ஒரு காரியமும் ஓடாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/191&oldid=590568" இலிருந்து மீள்விக்கப்பட்டது