பக்கம்:நெற்றிக்கண்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 191

வேண்டுமே என்ற உணர்வுடன் ஏற்கெனவே பெரும் பகுதி எழுதி யும் குறிப்பு அமைத்தும் வைத்திருந்த பூம்பொழில் தொடர் நாவலின் இறுதிப் பகுதியை உருவாக்குவதில் முனைந்தான். மாலையில் தம்புச்செட்டித் தெருவிலிருந்த நேஷனல் டைம்ஸ் காரியாலயத்துக்குச் செல்ல நினைத்திருந் ததனால்-பகலிலேயே பூம்பொழில் வேலையை முடித்து விட எண்ணியிருந்தான் அவன். பகல் சாப்பாட்டுக்குக்கூட அவன் மெஸ்ஸிற்கோ வேறு எங்குமே போகவில்லை. கண்ணப்பா லாட்ஜ் பையனை பிளாஸ்க் நிறையக் காபி வாங்கி வரச்செய்து அருகில் வைத்துக்கொண்டு எழுத்து வேலையில் மூழ்கினான். வேலை முடியும்போது ஐந்தரை மணி. அதையும் சரிபார்த்துப் பதிவுத் தபாலில் பூம்பொழி லுக்கு அனுப்பிவிட்டு மவுண்ட்ரோடிலிருந்தே அவன் தம்புச் செட்டித் தெருவுக்குப் புறப்படும்போது ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. பஸ்ஸில் போகும்போது விரைவாகப் பார்வையில் பட்டு மறைந்த சர். தாமஸ் மன்றோவின் சிலை-முதல் நாள் இரவு நண்பர் மகாதேவன் கூறிய தத்துவத்தை நினைவுகூரச் செய்தது. அன்றிரவும் மகாதேவ னும் அவனும் நெடுநேரம் நேஷனல் டைம்ஸ் காரியாலயத் தில் பேசிக் கொண்டிருந்தார்கள். செய்திகளுக்குத் தலைப் புப் போடுவது மொழி பெயர்ப்பு, புரூஃப் திருத்தல்-ஆகிய சில உதவிகளை அவருக்குச் செய்தான் சுகுணன். அன்று மகாதேவனும் அவனும் டைம்ஸ் காரியாலயத்திலேயே இரவில் தங்கிவிட்டனர். டைம்ஸின் ஸ்ப்ளிமெண்ட் ஒன்று வெளிவர இருந்ததனால் தொடர்ந்து சில இரவுகள் வேலை இருந்தது. மகாதேவன் காரியாலயத்திலேயே தங்கினார். சுகுணனும் சில நாட்கள் அவருக்கு உதவியாக அங்கு அதிக நேரம் செலவழித்தான் அதில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் மிகுதியாயிருந்தன. அவன் நாகசாமிக்குக் கடிதங்களை அனுப்பிய மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ அவனுடைய இராஜிநாமாவை எதிர்பார்த்தே தயாராக எல்லாம் கணக்குப் பார்த்து வைத்திருந்தது போல் "செக்' இணைத்து-இராஜிநாமா ஒப்புதல் கடிதத்தோடு பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/193&oldid=590570" இலிருந்து மீள்விக்கப்பட்டது