பக்கம்:நெற்றிக்கண்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 193

கொண்டிருந்துவிட்டுக் காரியாலயத்தின் அச்சக நண்பர் களைப்பற்றிக் கனிவுடன் விசாரித்தபின் நாயுடுவிற்கு விடை கொடுத்தான் சுகுனன். அந்தச் சில நாட்களில் மகா தேவனோடு பழகியதில் அவருடைய பத்திரிகையாகிய இலட்சியப் போராட்டத்தை நடத்துவதற்காக-அவர் படும் துன்பங்களையும் சுகுணன். கண்டிருந்தான். ஹார்பரில் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து கிடக்கும். பணம் கட்டிக் "கிளியர் செய்ய முடியாததால் உள்ளேயே குமையும் ஊமைத் துன்பத்தோடு-அதை மற்றவர்களிடம் சொல்வி அவர்களையும் வேதனைப்படுத்தாமல்-தமக்குள்ளேயே வைத்து வேதனைப்படும் சுபாவமுள்ளவர் மகாதேவன். பூம்பொழில் காரியாலயத்திலிருந்து வெளியேறியபோது தனக்குக் கிடைத்த தொகையையும், வழக்கமாகத் தன் னுடைய நாவல்களை வெளியிடும் ஒரு பதிப்பாளரிடமிருந்து வாங்கிய தொகையுமாக ஒரு பத்தாயிரம் ரூபாய்வரை அவருக்கு உதவ முன்வந்தான் சுகுணன் மகாதேவன் முதலில் தயங்கினார்-மறுத்தார். தனக்குக் கஷ்டமே இல்லை என்பது போல் சுகுணனிடம் சிரித்துப் பேசி மழுப்பினார். சுகுணன் மிகவும் வற்புறுத்தியபின் 'சிநேகிதர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பெரும்பாலும் சிநேகிதத்தைப் பணயம் வைக்கிற காரியம்ாக முடிந்து விடுகிறது. அதனால்தான், பயப்படு: கிறேன்-' என்றார். அதற்கும் சுகுணன் சரியானபடி பதில் கூறினான்:

'நீங்களும் அப்படிப்பட்ட சிநேகிதரில்லை; நானும் அப்படிப்பட்ட சிரமம் தரும் சிநேகிதனாக மாறிவிடப்போவ. தில்லை. ஆகவே தயங்காமல் நான் தருவதை வாங்கிக் கொள்ளுங்கள். இதை வாங்கிக் கொள்ளத் தயங்குகிறவரை என்னை உண்மை நண்பனாக நீங்கள் அங்கீகரிக்கவில்லை. என்றுதான் நான் கருதுவேன்.'

'இதற்கு அப்படி அர்த்தமில்லை சுகுணன்! எனக்கு. வரும் சிரமங்களுக்கு என் நண்பர்களை ஒவ்வொருவராக நான் பணயம் வைக்கக் கூடாது என்றுதான் பார்த்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/195&oldid=590572" இலிருந்து மீள்விக்கப்பட்டது