பக்கம்:நெற்றிக்கண்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நெற்றிக் கண்

பூட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டுக் @Tಷ-ಅEಿ. அவளுக்கோ அவனைப் பார்த்ததும் பேச்சே வரவில்லை. கண்கலங்கி அழுதுவிடுவது போன்ற துயர மோனத்துடன் எதிரே வந்தாள் அவள். -

'செளக்கியமா? ஏது இப்படி திடீரென்று சென்னைப் பக்கம்?'-என்று அவன்தான் முந்திக்கொண்டு அந் யோந்யம் தெரியாது வேற்றுமைக் குரலில் அவளை விசாரித்தான். -

'திடீர் திடீரென்று எல்லாக் காரியங்களும் நடக்கிற போது இது அப்படி என்ன பெரிய காரியம்?' என்று. கோபத்தோடு ஆரம்பித்தாள் அவள். அ வ ளு ைட ய அழுகையையோ ஆத்திரத்தையோ தெருவில் வைத்து உரையாடிக் கொள்ள முடியாத நிலையில் மறுபடி மேலே போய் அறைக் கதவைத் திறந்து அவளை உள்ளே வருமாறு: அழைத்தான் சுகுணன். -

"டெலிபோனில் பேசிய மறுநாளே காலையில் விமானத்தில் வந்து இறங்கியிருப்பேன். அவர் ஊரிலில்லாத தால் முடியவில்லை. நேற்றுத்தான் வந்தார். உடனே எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்கு என்னு பொய். சொல்லி இராத்திரி விமானத்துக்கே அவரிடம் டிக்கட் வாங்கச் சொன்னேன். சென்னைக்கு ஃபோன் பண்ணி உங்கப்பாவிட்ம் சொல்லிக் காலையில் மீனம்பாக்கத்துக்குக் கார் கொண்டுவரச் சொல்லிடட்டுமா?’ என்று விமான திலையத்தில் வழியனுப்ப வந்தபோது கேட்டார் அவர். வேண்டாம்! நானே மீனம்பாக்கத்திலிருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கார் வரவழைத்துக் கொள்கிறேன்-- என்று சொல்லித் தப்பித்துக் கொண்டேன். வீட்டிலிருந்து கார் வந்து விட்டால் இங்கே வரமுடியாது. நேரே அங்கே போகவேண்டியிருக்கும். அதனால்தான் டாக்ளியில் வந்தேன்’

'இருக்கட்டுமே! நான் எங்கே ஒடிப் போகிறேன்! என்னைப் பார்க்க இத்தனை அவசரமென்ன துளசி? அதற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/198&oldid=590575" இலிருந்து மீள்விக்கப்பட்டது