பக்கம்:நெற்றிக்கண்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 99

சரியாகப் பாவித்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது-- என்று சுகுணன் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கியபடியே கூறியபோது அவன் தன்னைத் தவிர்த்துத் தவிர்த்து மறு. மொழி உரைப்பதை பொறுக்காமல் அவள் வேதனைப்

படுவது தெரிந்தது, சுகுணனே மேலும் கூறினான்;

'உன்னிடம் ஒரு வேண்டுகோள் துளசி தயவு செய்து அதை நீ ஏற்றேயாக வேண்டும். வீட்டுக்குப் போய் அப்பா விடம் என்னுடைய இராஜிநாமாவைப்பற்றி நேரடி யாகவோ, குறிப்பாகவோ நீ எதுவுமே கேட்கக் கூடாது. உனக்கும் அது நல்லதில்லை, எனக்கும் அது நல்லதில்லை. மணமாகிக் கணவனோடு வாழத் தொடங்கிவிட்ட நீ உன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடக்கூடாது. இன்னும் நீ பேதையாகவே இருப்பதை நான் விரும்ப மாட்டேன். உலகத்தைக் கற்றுக்கொள். அப்படிக் கற்பதை அசட்டை செய்தோ, மறந்தோ கற்பனையில் வாழாதே. அதனால் பல அவதூறுகள்தான் கிளைத்துப் பெருகும்.'" - -

'இப்போது சொன்னிர்களே: இதற்கு என்ன அர்த்தம்?’’ -

" உனக்கே புரியும். நன்றாக யோசித்துப் பார்...'

"என் தவிப்புப் பெரியது. உங்களுக்காகத்தான் டில்லி யிலிருந்து பதறிப்போய் ஓடி வந்தேன்.'

'நம்புகிறேன். ஆனால் உலகத்திற்கு இனி அதைச் சொல்ல முடியாது. மனிதர்களின் காதல் சத்தியங்கள் தோற்றபின் உலகத்திற்கு அவை செல்லாக் காசுகளாகி விடும். வீட்டுக்குப் போய் மரியாதையாய், லட்சணமாய் "அப்பா உங்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால் உடனே வந்தேன்-என்று சொல் அதை உலகம் ஏற்கும். அசடுபோல், சுகுணன் சார் இப்போது பூம்பொழிலில் இல்லையாமே?-என்று கேட்காதே! அப்படி நீ கேட்பதை எந்த உலகமும் நல்லபடி ஏற்றுக் கொள்ளாது...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/201&oldid=590578" இலிருந்து மீள்விக்கப்பட்டது