பக்கம்:நெற்றிக்கண்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 நெற்றிக் கண்

"உங்களுடைய பேச்சில் முதலிலிருந்தே என்னைத் தவிர்த்துவிட முயல்கிறீர்கள்?’-என்று பதில் கூறிய குரல் நெகிழ்ந்து அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. சுகுண னுக்கும் அந்த வேதனை பொறுக்கவில்லை. மிக அருகில் நெருங்கி, உரிமையின் பழக்கத்தால் முன்போலவே அவளைத் தொடவந்த கைகளை நாணயமாகவும், ஒழுங் காகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, '"துளசீ'-என்று கனிவான குரலில் அவளை அழைத்தான் சுகுணன்,

அவள் நன்றாகத் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப். பார்த்தாள்.

"நான் உன் நெஞ்சிலிருக்கிறேனா இல்லை?"

"உங்களைத் தவிர வேறொன்றும் என் நெஞ்சில் இல்லையே?’’ -

"அப்படியானால் என் வார்த்தைகளுக்கும் அந்த. மரியாதையைச் செய்! என்னை நம்பு. ஏனென்றால் நான் உன்னை நம்புகிறேன். இந்த நம்பிக்கைக்கு உடம்பும்உடம்பும் சேர்ந்து வாழ்வது மட்டும் இலட்சியமில்லை , மனங்கள் கலப்பது மிகப் பெரிய காரியம், அதைப் பவ. சமயங்களில் பலர் உலகுக்கு நிரூபிக்க முடிவதில்லை. அப்படி நிரூபிக்க முடியாததை நீ ஒரு குறையாக எண்ணி வாடாதே -என்றபோது சுகுணனின் குரலும் சோகத்தில் நெகிழ்ந்து கரகரத்தது. - . . -

பதினோராவது அத்திய ாயம்

உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லை யானாலும் அவ்வப்போது விசாரிக்கிறவர்கள் அதிக மாக இருக்கிறார்கள். -

வெட்டு ஒன்று துண்டு இரண்டாக எதையும். பட்டுக் கத்தரித்தாற் போல எழுதத் தெரிந்த சுகுணன் அப்போது துளசியிடம் அப்படிப் பேசித் தவிர்க்க முடியாமல் தவித்தான். உணர்ச்சிகளை எதிர்கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/202&oldid=590579" இலிருந்து மீள்விக்கப்பட்டது