பக்கம்:நெற்றிக்கண்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 201

போது எல்லா மனிதர்களும் பேதைகளாவதிலிருந்து தப்ப முடியாதுபோல் தோன்றியது. ஆசைப்படுவதற்கும் அருவருப்படைவதற்கும் சொந்த மனங்கள் மட்டும் இல்லா விட்டால், யார் யாரோடு வாழ வேண்டுமென்று மனிதர்கள் நிர்ணயிக்கிறார்களோ அப்படியே வாழ்ந்து விடலாம். தான் மனத்தில் நிர்ணயித்தபடி வாழமுடியாதுபோய்'இன்னொருவர் நிர்ணயித்தபடி வாழ்கிறோம் என்ற நினைப்பே, வைத்தியர்கள் மருந்து கொடுத்துத் தீர்க்க முடியாத ஒரு நோய்தான். மனத்தின் அந்தரங்கமான புண்களை ஆற்ற முடியாதவரை மனிதன் கண்டு பிடித் திருக்கும் எல்லா மருந்துகளுக்கும் ஒரு தோல்வியும் உண்டு போலிருக்கிறது என்று எண்ணினான் சுகுனன். துளசியைச் சமாதானப்படுத்தி அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு அன்று அந்தக் காலை வேளையில் மிகவும் சிரமப்பட்டான் அவன். துளசியின் பதற்றத்தையும், அவள் டில்லியிலிருந்து பறந்து ஓடி வந்திருக்கும் நிலையையும், அவளை வீட்டுக்கு அனுப்பிய பின் தனக்குள் நிதானமாகச் சிந்தித்தபோது காதல் தோல்விகளின் போது நிச்சயமாக அநுதாபத்திற்குரியவர்கள் .ெ ப ண் க ேள என்று தோன்றியது அவனுக்கு. அப்படிச் சிந்தித்தபோது துளசியின் மேல் அதுவரை ஏற்பட்டிராத எல்லைவரை அவனுள் பரிவு பெருகி வளர்ந்தது. ஒரு பெண்ணின்மேல் சத்தியமாகப் பொங்குகிற இந்தப் பரிவிற்குத்தான் காதல் என்று உலகில் பெயர் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்பதையும் சுகுணன் அப்போது உணர்ந்தான். துளசி .யின் தாபங்களையும். வேதனைகளையும் எண்ண எண்ண அவள் தன்ன்ன மறக்கின்றவரை-தன்னுடையநினைவுகளே அவளுள் எழ்முடியாதபடி தான் எங்காவது கண் காணாத தேசத்திற்கு ஒடிப்போய் இருந்துவிட வேண்டும்போல், அவனுக்குத் தோன்றியது. போய்ச் சேர்ந்த இடத்தில் மன நிறைவோடு வாழவும் முடியாமல், பின்தங்கிய நினைவு களையும் காதல் சத்தியங்களையும் மறக்கவும் முடியாமல் அவள் படும் வேதனைகளைப் பார்த்த பின்பு அவளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/203&oldid=590580" இலிருந்து மீள்விக்கப்பட்டது