பக்கம்:நெற்றிக்கண்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 2 நெற்றிக்கண்

குற்றவாளியாகவும் அவனால் எண்ண முடியவில்லை. தந்தையின் முன் கோபத்திங்குப் பயந்து திருமணத்திற்கு, ஏற்பாடு நடக்கிற சமயத்தில் தன் மனத்திலிருப்பதைத். திறந்து காண்பிக்க முடியாத அபிப்பிராயக் கோழைத். தனத்திற்கு அவள் ஆளாகி விட்டதாகவே நினைக்க முடிந்தது. சூழ்நிலைக்குப் பயந்து-பொது அபவாதம்வந்து விடுமோ என்று அஞ்சித் தீரர்களும், இலட்சியவாதிகளு. மாகிய ஆண்களே, பல சமயங்களில் சமூக மேடை என்ற தளத்தில் நாகரிகமாக நின்று மனத்தை மூடிக்கொண்டு விடுகிற அளவு அபிப்பிராயக் கோழைத்தனமுள்ள நாட்டிலே, பேதைமை நிறைந்த பெண்ணொருத்தி நூலிழை யளவில் தன் அந்தரங்கத்தை வெளிகாட்டிக்கொள்ள முடியாதவளாகி விட்டாள் என்பதை-அவன் உள்ளுர மன்னிக்கவும் இப்போது தயாராயிருந்தான். பல நாவல் களில்-பல சிறு கதைகளில்-பலவிதமான கதாபாத்திரங் களின் மனச்சித்திரங்களை வரைந்து வரைந்து அநுபவப் பட்ட அவனுடைய சிந்தனை இந்தப் பிழையை இது நேரக் கூடியதுதான்-என்று அங்கீகரிக்கத் துணிந்தது. ஆனால் சிந்தனை அங்கீகரிப்பதை உணர்வு அங்கீகரிக்க மறுத்த சமயங்களில் துளசியின்மேல் அவன் கோபம் கொண்டு கொதிக்கவே நேர்ந்திருந்தது. சிந்தனையையும், உணர் வையும் இணைக்கிற அளவு விவேகானந்தர்ாகவோ, காந்தியாகவோ அவன் ஆகியிருக்கவுமில்லை. மனிதனின் இயற்கைக் குணங்களாக இரத்தத்தோடு இழைகிற மான சனங்கள். கோபதாபங்கள் எல்லாம் உணர்வுகளில் இருக்கும்போது சிந்தனை மட்டும் தனித்துச் செயல்பட வழியில்லாதவனாகவே இருந்தான் அவன், துளசி சென்ற சிறிது நேரத்திற்குப்பின்,காபி கொண்டு வந்த கிளாஸ்களை எடுக்க வந்த லாட்ஜ் பையன், இன்னாசார் அந்தம்மா கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்களா?'- என்று அர்த்

தமும், சம்பந்தமும் இல்லாமல் ஒரு நிமிஷ்ம் நின்று சிரித்துக் கொண்டே வின்ாவியபோது, ஒண்னுமில்லே கிள்ால்ை.

எடுத்துக் கொண்டு போஎேன்று இட்டுமே சுகுண்னால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/204&oldid=590581" இலிருந்து மீள்விக்கப்பட்டது