பக்கம்:நெற்றிக்கண்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2:03

பதில் கூற முடிந்தது. பெண்ணின் மேல் அல்லது பெண்மை என்ற வசீகர சக்தியின்மேல்தான் இந்த உலகத்துக்கு எத்தனை கருணை? எத்தனை பாசம்? எத்தனை மயக்கம்:என்று உலகை வியந்தும் அப்போது ஒரு சிந்த்னை தோன்றியது அவனுள். விமான நிலையத்திலிருந்து நேரே டாக்ளியில் தன் அறைக்கு அவள் வந்த பரபரப்பு, அழகின் சோகமாக எதிர் நின்று அழுவது போன்ற குரலில் மன்றாடியது. எல்லாமாகச் சேர்ந்து கண்ணப்பா லாட்ஜ் பையனைக்கூடப் பாதித்திருப்பதை உணர்ந்தான் அவன். விம்பந்தமில்லாமல் யாராவது கேட்கும் இப்படிக் கேள்விக் கூட, ஒரு நினைப்பைப் படைக்கிற சக்தி பெறுவது வியப்பா கத்தானிருந்தது. துளசி மனம் மாறும்படி கண்காணாமல் நீண்ட காலத்துக்கு வேறெங்காவது போய்விட வேண்டும் போல ஒரு விரக்தியும் அப்போது அவனுள்ளே எழுந்தது" இலங்கையின் தலைநகரான கொழும்பிவிருந்து வெளியாகிற தமிழ்த் தினசரிஒன்றின் இலக்கியப் பகுதியான வாராந்திர வெளியீட்டைக் கவனித்துக் கொள்ள ஓர் ஆசிரியர் தேவை என்று முன்பு ஒருமுறை சம்பந்தப்பட்டவர்கள் தன்னை வந்து அழைத்தது இப்போது ஞாபகம் வந்தது அவனுக்கு. அதே போல மலேயாவிலுள்ள கோலாலம்பூரிலிருந்தும் ஓர் அழைப்பு இருந்தது. முன்பு இந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அங்கெல்லாம்போய் அமர்ந்து விடாமல் நினைப் பிலும் நேரிலும் ஒரு மயக்கமாக ஒர் இனிய சொப்பனமாக நின்று தடுத்த புன்னகை துளசியுடையதுதான். இப்போது "அங்கெல்லாம்கூடப் போகலாமே" - என்று துணிகிற அளவுக்கு அவனுள் வேதனை பூட்டக் கூடியதும் இன்று புன்னகையில்லாத துளசியுடைய முகம்தான். 'அன்பு செய்கிற பெண் மனிதனின் வாழ்க்கையை எப்படி ஆட்டிப் படைக்கிறாள்-என்று நிதானமாக ஒரு விநாடி நினைத்த் போது அவனுள் உணர்வு அந்த நினைவை ஏற்றது. அறிவு அந்த நினைவை விவாதித்தது. இந்தச் சிந்தனைகள் குழம்பும் மனநிலையோடு அவன் வெளியே புற்ப்பட்டான். பி. ஆர். அன்சன்ஸ், பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/205&oldid=590582" இலிருந்து மீள்விக்கப்பட்டது