பக்கம்:நெற்றிக்கண்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204. நெற்றிக் கண்

தம்புச்செட்டித் தெருவிற்குப் போகுமுன் சென்டிரலில் இறங்கிக் கோயம்புத்துாருக்கு டிக்கட் வாங்கச் சென்ற போது டிக்கட் கெளண்டர் க்யூவில் எதிரபாராத விதமாக உறவினர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டபின், -

"'என்னப்பா? எங்களுக்கெல்லாம் எப்போது சாப்பாடு போடப்போகிறாய்?" என்று உலகியல் வழக்கப்படி திருமணத்தைப் பற்றி விசாரித்தார் அவர். உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் விசாரிக்கிற வர்கள் அதிகமாக இருக்கிறார்களென்று தோன்றியது. இந்த விசாரணை உலக வழக்கில் ஒரு பொது நாகரிக வழக்கம். - r

'முதலில் தங்கைக்கு அல்லவா நடக்க வேண்டும்?'என்று சுகுணன் கூறியதை அவர் ஏற்பதுபோல் தோன்ற வில்லை. .

'நீதான் மூத்தவன். உனக்குத் தானே முன்னால் ஆக வேண்டும்? உன் தங்கையை நீயும் உன் மனைவியுமாக மனையில் இருந்தல்லவா தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்?'- என்று: விவாதித்தார் விடாகண்டரான. அந்த உறவினர். சந்தித்த இடத்தில் விசாரித்த சம்பிரதாய விசாரணையை அவர் சம்பிரதாயமாக முடித்துக் கொண்டு போகாமல் வளர்த்துவதாகச் சலிப்படைந்த சுகுணன் "கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டியிருக் கிறது. மறுபடி சந்திக்கும் போது நிறையப் பேசலாமே?’’. என்ற புன்னகையும் கைகூப்புதலுமாக விடைபெறுகிற விதத்தில் தப்ப முயன்றான். அந்த உறவிளர் அப்போதும். விடவில்லை. "எங்காவது வெளியூருக்குப் பயணமோ? பத்திரிகைக் காரியமா? சொந்தக்காரியமா? என்று அப்போது அவன் டிக்கட் வாங்க் வந்த பயணத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு விநாடி அவருக்கு மறுமொழி கூறத் தயங்கிய சுகுணன் அடுத்த விநாடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/206&oldid=590583" இலிருந்து மீள்விக்கப்பட்டது