பக்கம்:நெற்றிக்கண்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 287

இத்தக் கட்டுரையும் வந்தாக வேண்டும். கூனுாருக்கும் உதக மண்டலத்திற்கும் நடுவே கிராமபோன் ஊசிகள் தயாரிக்கிற தொழிற்சாலை ஒன்றிருக்கிறது. அந்தத் தொழிற்சாலை யைச் சுற்றிப் பார்த்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று கேட்டிருந்தேன். வரச்சொல்லித் தந்தி அடித்திருக்கிறார் கள். நீங்கள் ஏதோ கோயம்புத்துார் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே, போனால் இதையம் முடித்துக்கொண்டு வந்துவிடலாமல்லவா?' என்று. அவனைக் கேட்டார். . -

சுகுணனும் அதற்கு இணங்கினான். அவருக்கு உழைக் கிறோம்-உதவுகிறோம் என்ற எண்ணத்தில் அறிவையும். இலட்சியத்தையும் இருகண்களாகக் கொண்டு அயராமல் முயலும் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனுக்குப் பாடுபட்டுத் துணைநிற்கும் பெருமிதத்தைப் பெற்றான் சுகுணன், அன்று மாலைவரை டைம்ஸ் காரியாலயத்திலேயே கழிந்தது. மறுநாள் மாலை ஊருக்குப் பயணம் இருந்ததனால்

டைம்ஸுக்கு அவன் போகவில்லை. அறையிலேயே இருந்: தான். பகலில் கடை வீதிக்குப் போய்த் தங்கைக்குச் சில பொருள்கள் வாங்கிக் கொண்டபின் மறுபடி அறைக்கு அவன் வந்தபோது துளசியிடமிருந்து ஐந்தாறு முறை: ஃபோன் வந்ததாக லாட்ஜ் பையன் சொன்னான். அப்படிப் பையன் சொல்லிக் கொண்டிருந்தபோதே மறுபடி ஃபோன் அடித்தது. பையன் ஃபோனை எடுத்துவிட்டு, உங்களுக் குத்தான்'-என்று சுகுணனிடம் நீட்டினான். மாலையில் அவனைப் பார்க்க வரலாமா?’ என்று ஃபோனில் கேட்டாள் துளசி. - . - . - . . . . . ‘. . -

ஊருக்குப் போவதாக நேற்றே சொல்லியிருந். தேனே?' என்றான் சுகுணன். ...

"என்றைக்குத் திரும்பி வருகிறீர்கள்?’’ "ஒருவாரம் வரை ஆகலாம்.'

அதற்குள் அப்பா என்னைப் பத்திரம்ாக டில்லிக்கு. விமானம் ஏற்றித் திரும்ப அனுப்பிடுவார்...' என்று அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/209&oldid=590586" இலிருந்து மீள்விக்கப்பட்டது