பக்கம்:நெற்றிக்கண்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நெற்றிக் கண்

ஏக்கத்தோடு கூறிய குரலுக்கு அவன் ஒரு மறுமொழியும் சொல்லத் தெரியாமல் தயங்கினான். முன்பெல்லாம் அவன் வெளியூர் புறப்படுகிற நாளானால் காலையிலேயே அவன் அறைக்கு வந்து சூட்கேஸில் பிரயாணத்துக்கு வேண்டிய புத்தகங்கள் துணிமணிகள் எல்லாம் அடுக்கி வைத்துவிட்டுப் போவாள் அவள். அவனே சொந்தமாகப் பெட்டியில் துணி மணிகளை அள்ளி வாரிப் போட்டுக்கொண்டு புறப்பட்டது. அவள் திருமணத்தன்று வெளியூருக்கு ஒடிய பயணம்தான். துளசி அடுக்கி எடுத்து வைத்தால் பெட்டியில் எல்லாம். வரிசையாக, நளினமாக-அழகாக அடுக்கப்பட்டிருக்கும். எதுவும் மறக்கப்பட்டிருக்காது. அவள் திருமணத் தன்று அவன் வெளியூருக்கு ஒடியபோது தானே தன் பெட்டியில் சாமான்களை வைக்கும் சமயத்தில், "இனி நான் தனி. என் பெட்டியில் பிரயாணச் சாமான்களை எடுத்து அடுக்கும் போது எந்த அழகான கைகளின் வளைகள் கலீர்கலிரென்று இதுவரை ஒலித்தனவோ அந்த அழகான கைகளின் வளை கள் இனி இங்கு ஒலிக்காது-என்று ஞாபகம் வந்தது. இப்படி அவன் மனதில் ஒடிக்கொண்டிருந்த இந்த ஞாய கத்தை அந்த விநாடியே பொய்யாக்குகிறவளைப் போல், நரன் வந்து பெட்டியில் புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைக்கட்டுமா?-என்று அப்போதே துளசி அவனிடம் ஃபோனில் கேட்டாள். வேண்டாம் நேரம் நிறைய இருக் கிறது. நான்ே பார்த்துக் கொள்கிறேன்'-என்றுதான் இன்று இப்போது அவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடிந்தது, எதிர்ப்புறம் ஃபோனில் சிலவிநாடிகள் மெளனம் நிலவியது. பின்பும் அவள் குரல் கரகரத்தது: . . . . .

"என்னைப் பிரித்து வித்தியாசமாக நினைக்க ஆரம் பித்து விட்டீர்கள்...' : - - -

"அப்படி நினைக்க வேண்டுமென்று உலக வழக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. துளசி...!" - "போகட்டும்: எனக்கு கொடுத்து வைக்கவில்லை. முடிந்தால் இன்னும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/210&oldid=590587" இலிருந்து மீள்விக்கப்பட்டது