பக்கம்:நெற்றிக்கண்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 20 3

ஒரு வாரம் இங்கு இருப்பேன். நீங்கள் திரும்பி வந்ததும்

உங்களைப் பார்த்து நிறையப் பேச வேண்டும். உடனே

டில்லிக்குத் திரும்ப எனக்கு மனமில்லை...' -

"அதுவும் இனி அநாவசியம்...'

'உங்களுக்கு எல்லாமே அநாவசியம்தான். நான் கூடத் தானே?" s

鬱 釀 象數 * * * * * * * * *

'நான் உங்களுக்காக இன்னும் ஒருவாரம் இங்கு பழி கிடந்தால்கூட நீங்கள் திரும்ப மாட்டீர்கள்...வேண்டு மென்றே போகிற இடத்தில் நாளாக்கினாலும் ஆக்குவீர்கள் இப்போதே சொல்லி விடுங்களேன். இங்கு நான் காத்திருக் கவா, வேண்டாமா?" -

- 'உன் இஷ்டம் துளசி... -என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டான் சுகுணன். -

-வைத்த சுவட்டோடு மறுபடி ஃபோன் மணி சீறிற்று . . எடுத்தான். அவள்தான் மீண்டும் பேசினாள்.

"ஏன் இப்படிப் பேசப் பிடிக்காமல் ஃபோனை டக்" கென்று வைத்து விட்டீர்கள்? அத்தனை வெறுப்பா என். மேல்?' . . . . -

"நீயாக அப்படி நினைத்துக்கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் துளசி?: . - .

-என்று அவன் ஆறுதலாக ஒரிரு வார்த்தைகள் விசாரித்த பின்பே அவள் திருப்தியோடு ஃபோனை வைத்தாள். எவள் பேதையாகி ஒருவனை விடாமல் ஓடி வந்து துரத்துகிறாளோ அவளுடைய அன்புகூடச் சலிப்பது உண்டு போலிருக்கிறது; ஒரேயடியாக இனிப்பு உண்பது போல் வந்து மோதும் அன்பு வெள்ளம் மனிதனைப் பிரமிக்கச் செய்து விடுவதால் மோத வருகிற அந்தப் பிரேமையோடு எதிர் பொங்கிக் கலக்கவும் முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/211&oldid=590588" இலிருந்து மீள்விக்கப்பட்டது