பக்கம்:நெற்றிக்கண்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 21.I.

துளசியின் ஆசைகளை ஒரு வேதாந்தியாக நின்று. "அல்பமானவை” என்று அவன் எடை போட முடியும். ஆனால் கவியாக நின்று அல்பமாக எடைபோட முடியாது. கவி இரத்தினங்களையும் மணிகளையும் நிறுத்துச் சிறிய பொருளுக்கும் பெருமதிப்புக் கணிக்கிறவன். கவிகள் தான் உலகத்தின் முதல்தரமான அல்ப சந்தோஷிகள். அவர் களுடைய நிறுவையில் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கும் விலைமதிப்பு அதிகமாகத்தான் கணிக்கப்படுமே ஒழியக் குறைவாகக் கணிக்கப் படுவதில்லை. அந்தக்கவி நிறுவை யில் துளசி ஓர் இரத்தினமாக அவன் மனத்தில் ஒளிர்ந்தாள். இரயிலில் ஒரு மலையாள தினப்பத்திரிகையின் தலைமை நிருபர் அவனோடு பயணம் செய்தார். சென்னையில் ஆண்டிற்கொருமுறை நிகழும் தென்பிராந்திய ரிப்போர்ட் டர்ஸ் கில்டின் மகாநாட்டில் அவரை அடிக்கடி பார்த்திருக் கிறான். அவன், அதனால் இருவரும் பல துறைகளைப் பற்றி உரையாடிக்கொண்டே செல்ல முடிந்தது. திருவனந்த புரம் எக்ஸ்பிரஸ் எப்படிச் சென்னைக்கும் தென்பகுதிக், கேரளத்திற்கும் இணைப்பு ஏற்படுத்துகிறது. பல மொழிப் பிரதேசங்களை ஊடுருவி ஓடும் இரயிலுக்கு எப்போதுமே ஒரு பத்திரிகையின் நல்ல சிறப்பு மலர் போன்ற அழகு உண்டு. அந்த அழகு. அந்தப் புத்துணர்வு, அந்தப் பிராயணத்தின் குறுகுறுப்பு எல்லாமே துளசியின் மனத்தில் உள்ள வேதனைகளை எண்ணி உருகுவதிலிருந்து தற்காலிக மாக அவனை விடுதலை செய்திருந்தன. ஜோலார் பேட்டை தாண்டியதும் மலையாள நண்பர் உறங்கத் தொடங்கிவிடவே சுகுணனும் "பெர்த்"தில் படுக்கையை விரிக்கலானான். துளசியின் சிற்றுண்டிப் பொட்டணத்தை அரக்கோணம் கடந்ததுமே காலி செய்தாயிற்று. அது அப்போதிருந்த அவன் பசிக்கு மிகவும் குறைவாயிருந்தா லும் கொடுத்தவளின் பிரியத்தினாலும் மன நிறைவினாலும் வயிறே நிறைந்துவிட்டதுபோல் பரிமளித்தது. வயிற்றை நிரப்பக் கூடியது சோறே ஆனாலும் யாரோ ஒருவர் நம் மேல் உயிரை வைத்து அன்பு செய்கிறார்கள் என்ற ஞாபகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/213&oldid=590590" இலிருந்து மீள்விக்கப்பட்டது