பக்கம்:நெற்றிக்கண்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2夏罗 நெற்றிக் கண்

தான் மனத்தை நிரப்புகிறது. மனத்தை நிரப்ப இப்படி ஒர்அன்பு தென்படுகிற நேரத்தில் வயிற்றை நிரப்ப வேண்டிய

பசிகூட ஞாபகத்தில் உறைப்பதில்லை. நாம் இன்னார். மேல் உயிரை வைத்திருக்கிறோம்-நம் மேல் இன்னார். உயிரை வைத்திருக்கிறார்கள்-என்ற நம்பிக்கைதான்

வாழ்க்கையை நடத்துகிறது’-என்றெண்ணிய போது அந்த எண்ணத்தின் திருப்தியிலேயே துளசி தன்னுடன் வாழ்வது. போல் உணர்ந்தான் சுகுணன். முன்பு பலமுறை அவளைக் கோபித்தது-ஆத்திரப்பட்டது எல்லாம் கூடத் தன்னு: டைய மனப்பக்குவமின்மையினால் தான் செய்த தவறு: களோ என்று கூட அவன் அந்த வேளையில் நினைக்கலா னான். ஒரு நினைப்பைப் பிரயாணத்தின் போது நினைத் தால் அதன்போக்கே தனி. -

மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள் திட்டங்: கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயாணத்தின் போதுதான் உருவாகின்றன போலும். பிரயாணத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பணி புலராத. மலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாக வும் அமைகின்றன. அப்படிப்பட்ட பல பொலிவான நினைவுகளுடன் உறவாடி உறவாடி உறங்கவே வெகு நேர மாயிற்று சுகுண்னுக்கு. உடனே சிறிது நேரத்தில் விடிந்ததுபோல் கோவையும் வந்துவிட்டது. இரயில் துக்கத்தில் இரவும் வேகமாக ஒடிவிடுகிறது. பனிமூடிய கோவை- அந்த மஸ்வீன் துணி போர்த்தாற் போன்ற. நளினக் கோலத்தைக் கொச்சி எக்ஸ்பிரஸ்" வருகிற நேரத். திற்காகவே புனைந்துகொண்டு காத்திருந்தாம் போலத். தோன்றியது. * . . . . . . .

'வைகறையைத் தெய்வங்கள் படைக்கின்றன. நடுப் . பகலை அரக்கர்கள் ஆள்கிறார்கள். இரவைமன்மதன் கைப் பற்றுகிறான். மறுபடியும் காலையில் தேவர்களின் தெய்வ சக்தி அதை மீட்டுகிறது என்று பாலைவனத்துப் பூக்கள்: நாவலை எழுதியபோது ஓரிடத்தில் தான் குறிப்பிட்டிருந்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/214&oldid=590591" இலிருந்து மீள்விக்கப்பட்டது