பக்கம்:நெற்றிக்கண்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நெற்றிக் கண்

றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன. சிறிதும் பெரிதுமாகப் புதிய முறையில் நவீனக் கட்டிட எழுச்சிகள் காலத்தையும் நகரின் தோற்றத்தையும் புதுமையாக்கிக் கொண்டு அண்ணுக்கு முன்னால் மங்கலாகத் தோன்றின.

பன்னிரண்டாவது அத்தியாயம்

"நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே-என்று சிவபெருமானையே எதிர்த்து கின்று கியாயம் பேசிய நக்கீரன் பிறந்தபோதே உலகத்தின் துணிவுள்ள முதல் பத்திரிகையாளன் பிறந்துவிட்டான்.

வழக்கமாகப் பார்க்கும் மனிதர்கள், வழக்கமாக நட மாடும் இடங்கள், இவற்றை நீக்கி வெளியூருக்கு வந்த உற்சாகம் மனத்தில் இருந்தது. கோவை நிலையத்திலிருந்து அண்ணுளருக்குப் போக வாடகைக் கார் தேடும் முயற்சியில் ஈடுபட்டான் சுகுணன், மிகச்சில ஆண்டுகளில் கோயம்புத் துார் எவ்வளவோ வளர்ந்திருந்தது. குண்டுசி, முதல் இயந் திரங்கள் வரை எல்லாவற்றையும் உருவாக்க வல்ல பல் பெரிய தொழிற்சாலைகள் தோன்றியிருந்தன. சத்திய மங்கலம் சாலையில் கணபதியைக் கடப்பதற்குள்ளேயே பல பெரிய தொழிற்கூடங்கள் புதியனவாகவும் நவீனமான தோற்றம் உடையனவாகவும் தென்படத் தொடங்கி விட்டன: சுண்ணாம்பு கலப்புடன் சுக்கான்கல்லும் மண்ணு மாகத் தெரியும் கோவையின் பூமியைப் பல இடங்களில் கட்டிடங்களுக்காக வானம் தோண்டிக் குவித்திருந்தார் கள். சென்னையிலும், பிறபெரிய நகரங்களிலும் கட்டிடங் கள் எழுகிற விரைவையும், ஆடம்பரத்தையும் காணும் வேளைகளில் எல்லாம் இனி உழுவதற்கும் விளைவதற்கும் மண்ணே மீதமிருக்காதோ என்று ஒரு மலைப்பான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/216&oldid=590593" இலிருந்து மீள்விக்கப்பட்டது