பக்கம்:நெற்றிக்கண்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2 : 9

'ஏதோ நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத் துக் கொண்டு நான் இப்படி இருப்பது உனக்குப் பிடிக்க வில்லையா அண்ணா?’ என்று அவனை மடக்கிக்கேட்டாள் பவானி. அந்தப் பேச்சு அவ்வளவில் மேலே தொடராமல் நின்றுவிட்டது. உதகமண்டலத்திலிருந்து அவர்கள் திரும் பிய நாளன்று அதிகாலையில் முதல் பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டிருந்ததாைல் மலையிலிருந்து கீழே மேட்டுப் பாளையத்திற்கு இறங்குகிற வழியில் பாக்குமரக் கூட்டங் களிடையே பஸ் வரும்போது திருமண வீட்டில் மணப்பது போல் பாக்குமரம் பூத்து மணந்த அந்த மங்கல நறுமணத் தைப் புற்றிச் சுகுணன் பவானியிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டே வந்தான். உதகையிலிருந்து திரும்பிய தினத்தன்று மாலையில் அவர்கள் மருதமலைக்குப் போய் வந்தார்கள். அண்ணனும் தங்கையும் மறுநாள் அதிகாலை யில் பேரூருக்குப் போய் வந்தார்கள். சிறுசிறு அலைகளுடன் ஓர் ஒரமாக நீர்சிலித்து ஒடும் நொய்யல் நதிக்கரையில் தென்னைமரக் கூட்டமும் கொய்யாமரக் கூட்டமுமான அந்த இடம் சுகுணனுக்கு மிகவும் விருப்பமானது. கோவை யின் பரபரப்பு ஒடுங்கி அமைதியும் அழகும் விலகி இருக்கு மிடம் என்பதால் சிறு வயதிலிருந்து பேரூரை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அன்று பகலில் சிங்காநல்லூரிலுள்ள ஓர் உறவினர் வீட்டிற்கு அவனும் பவானியும் சாப்பிட அழைக்கப்பட்டி ருந்தனர். உணவு முடிந்ததும் அவர்களுடைய அழைப்பின் நோக்கம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சுகுணனுடைய ஜாதகம் வேண்டுமென்று மெதுவாக ஆரம்பித்தார் அந்த உறவினர். அண்ணனும் தங்கையும் அந்தக் கேள்வியை நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட்டு அங்கிருந்து தப்பினார் கள்.

"அண்ணாவையே கேளுங்களேன். நான் சிறியவள், என்னைக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?" என்றாள் பவானி. . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/221&oldid=590598" இலிருந்து மீள்விக்கப்பட்டது