பக்கம்:நெற்றிக்கண்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 - நெற்றிக் கண்

தென்று நினைத்து ஆங்கிலம் பேசுவதற்குப் பதில் தனக்குத் தெரியும் ஆங்கிலத்தைத் தனது சுய விளம்பரங்களில், ஒன்றாக அடுத்தவனுக்குக் காண்பித்தே தீர வேண்டுமென் பதற்காகவே ஆங்கிலம் பேசுகிறான். சராசரி இந்தியனிடம் இந்த மனப்பான்மை கிளர்ந்திருப்பது நாகரிகங்களில் ஒன்றாகத் தோன்றினாலும் சில சமயங்களில் போலியாகவே வளர்ந்து விடுகிறது. ஆங்கிலத்தில் வினாவிய அந்தச் சக பிரயாணியிடம் சுகுணன் முற்றிலும் ஆங்கிலத்திலேயே விரைந்து உரையாடத் தொடங்கியபோது போர்க்களத்தில் ரவை தீர்ந்துபோய் வெற்றுத் துப்பாக்கியோடு பேந்தப் பேந்த விழிக்கும் கோழையைப்போல் சொற்கள் தீர்ந்து போன ஆற்றாமையோடு வேறு வழியின்றி மறுபடி தமிழுக்கே வந்தார் அவர். ஆயினும் அவரைச் சிறிது நேரம் தவிக்க விடவேண்டுமென்று குறும்புத்தனமாகத் தீர்மானித் துக் கொண்டுவிட்ட சுகுணன் வேண்டுமென்றே தன் ஆங்கிலத்தில் கடுமையான பிரஞ்சு, லத்தீன் வார்த்தை. களைப் போட்டு அவரைத் திணற அடித்தான். அவருக்குப் புத்தி வந்துவிட்டது. -

'உங்களிடம் நிறையப் பேசணும் சார்,'-என்று அவர் திரும்பத் திரும்பத் தமிழில் அபயக் குரல் கொடுத்த பின்பே அவரிடம் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கினான் சுகுணன். 'இவரை இவ்வளவு தண்டித்தது போதும்' என்று. தோன்றியது அவனுக்கு. சுதேசி வாழ்க்கைக்காக ஆயிரங். காலம் போராடிவிட்டுத் தம்மை மறந்து விதேசியாகவே வாழும் இந்தியர்களை எண்ணும்போது அவனுக்குப் பாரதி யாருடைய நடிப்புச் சுதேசிகள் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சுதேச உணர்வு வராதவரையில் சுதேச இலட்சி யங்கள் எல்லாமே போலியாகத்தான் போய்விடுகின்றன. சக பிரயாணி தன்னிடம் நிறையப் பேசுவதற்கு என்ன இருக்கிறது?’ என்றெண்ணி அவன் தயங்கியபோது அவரே. தொடர்ந்தார்: . . . . . - م . .

"'கதை-கிதை-எழுதுகிறீர்களே...? அதற்கு ஏதாவது: பணம் கொடுப்பார்களோ, இல்லையோ?’-இப்படிப்பட்ட கேள்விகள் ரசாசரி மனிதனின் இலக்கிய ஞானம் எவ்வள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/224&oldid=590601" இலிருந்து மீள்விக்கப்பட்டது