பக்கம்:நெற்றிக்கண்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 路23

விற்கு இந்த நாட்டில் வளர்ந்திருக்கிறது அல்லது வளர்' வில்ல்ை என்பதைக் காட்டுபவை. இலக்கியத்தைப் பற்றி அக்கறை கவலை பொறுப்புகள், எல்லாம் அறவே இல்லா விட்டாலும் பணத்தைப் பற்றிய அக்கறை, கவலை எல்லாம் இங்கு இருக்கிறது. ஒரு மனிதனை உயிருடனே வெயிலில் நிறுத்தி வைத்துத் திறந்த முதுகிலே ஆணி அறைவது போன்ற கேள்விகள் இவை. அதனால் இவற்ம்ை எதிர்கொள்ளும் போது கோபம் அல்லது சலிப்புத் தவிர வேறெதையுமே சுகுணன் கண்டதில்லை. இப்போதோ கோபம்தான் முன் நின்றது.

"பணம் நிறையக் கிடைத்தால் நீங்களும் எழுதலாம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?'- என்று சிரித்துக் கொண்டே அவரைப் பதிலுக்கு வினாவினான் அவன். அவனுடைய அந்தச் சிரிப்புக்குப் பின்ளால் கோபமிருப்ப புரியாமலேயே அவர் பேச்சைத் தொடர்ந்தார். .

'இல்லை! ஆயிரம் இரண்டாயிரம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே; அதுதான் கேட்டேன்...' என்ற போது "இதற்குக்கூட ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கிறார்களே என்று அவர் வியப்பதோ, அலட்சியம் செய்வதோ சொற் களுக்கு அப்பால் தொனிப்பதைச் சுகுணனால் புரிந்து கொள்ள முடிந்தது, -

"ஆயிரம் இரண்டாயிரம் என்ன? ஐயாயிரம் ஆறாயிரம் கூடக் கொடுக்கிறார்கள். சிறுகதை நாவலுக்குப் பெரிய பெரிய போட்டிகள் வைத்துக் கால் லட்சம் அரை லட்சம் கூடக் கொடுக்கிறார்கள், சினிமாவுக்குக் கதை எழுதினால் இன்னும் நிறையக்கூடக் கொடுப்பார்கள். கதை வெளி வந்தபின் யாராவது கேஸ் போட்டுப் பரிசு பெற்றதோ, படமாக வந்ததோ, திருட்டுக்கதை என்பதையும் நிரூபிப்

பார்கள்." X- . -

நீங்கள் சேலி செய்கிறீர்கள் சார். வெறும் பணத்தைத் தவிரப் புகழும் இதில் இருக்கிறதே?’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/225&oldid=590602" இலிருந்து மீள்விக்கப்பட்டது