பக்கம்:நெற்றிக்கண்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 225

பலவிதமான சுவையுடையவர்கள் இருப்பார்கள். ஒவ் வொருவர் சுவைக்கும் ஏற்றார்போல பத்திரிகையில்

ஏதாவது இருக்க வேண்டும். மக்கள் கேட்பதைக் கொடுக்கா விட்டால் புறக்கணிக்கிற காலம் இது...'

"நாங்கள் விரும்புவது.இது, ஆகவே இதைப் பற்றியே இன்று பாடம் நடத்துங்கள்-என்று ஏதாவதொரு நடிகை. யின் பெயரைச் சொல்லி மாணவர்கள் ஆசிரியரை வற்புறுத். தினால் கூடக் குடியரசுக் காலத்துக்குக் கட்டுப்பட்டு அப்படியே நடத்த வேண்டுமென்று கூறுவீர்கள் போலிருக்' கிறதே? அறிவுத் தொழில் தொடர்புடைய கல்வி, பத்திரிகை, கலைகள் முதலிய துறைகளில்-கொடுப்பவர் பெறுபவர் என்ற உறவு-விற்பவர்-வாங்குபவர்-உறவு போல் வியாபார ரீதியாகவே முற்றிலும் மாறிவிடுவது நல்லதில்லை. நல்லகல்வி வளர-நல்ல இலக்கியம் வளர-நல்ல கலைகள் பெருக அது துணை செய்யாது. விற்பவர்-வாங்கு, பவர்-உறவைவிடத் தரத்திற் சிறந்த வேறொரு உரமான உறவு கல்விக்கும், கலைக்கும். இலக்கியத்திற்கும் தேவைப் படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

'காலம் போகிற வேகத்திற்கு ஒத்துவராத கருத்துக்

களைக் கூறுகிறீர்கள். இவையெல்லாம் இப்போது யாருக்குப் புரியும்?'-என்று அலுத்துக் கொண்டார் அவர். அந்த வேளையிலே அவரை யாரென்று விசாரிக்கலானான் சுகுணன். போத்தனூரில் ஏதோ ஒரு பவுண்டரி மானேஜ ராய் இருப்பதாக அவா தெரிவித்தார். விசாரணை தன்னைப் பற்றியதாய்த் திரும்பவே அவர் பேச்சில் சிக்கணம் கடைப்பிடித்து விட்டுப் பெர்த்தில் ஏறித் துண்டை விரித்துப் படுக்கத் தொடங்கி விட்டார். தன்னைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள முயலுவது அநாகரிக மென்றும், தான் மட்டும் மற்றவர்களைப் பற்றித் துறுதுறுப் பாகத் துளைத்து விசாரிக்க இடமுண்டு என்றும் கருதாத, நாகரிக மனிதனே உலகில் இருக்க மாட்டான்போல் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/227&oldid=590604" இலிருந்து மீள்விக்கப்பட்டது