பக்கம்:நெற்றிக்கண்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22份 - நெற்றிக் கண்

இரவு நேரத்து இரயிலில் உறக்கம் வராமல் உறக்கம் வந்தாலும் உறங்க இடமில்லாமல் நெடுநேரம் சிந்தித்த :படியே பிரயாணம் செய்தான் சுகுணன், கோயம்புத் தாரைப் பற்றி-தங்கையைப் பற்றி, தங்கை வேலை பார்க் கும் பள்ளிக்கூடத்தைப் பற்றி, பத்திரிகைத் தொழிலைப் பற்றி-தனது எதிர்காலத்தைப் பற்றி எல்லாம்தான் அவன் சிந்தனையில் மாறி மாறி வந்தன. துளசி இன்னும் சென்னையில் இருப்பாளா, அல்லது டில்லிக்குத் திரும்பி இருப்பாளா?-என்றும் நடுவில் ஒரு சிந்தனை மனத்தை அழுத்திவிட்டு மறைந்தது. நேரம் ஆக ஆக ஒடும் இரயிலின் அடைக்கப்படாத ஜன்னல் வழியே ஊடுருவும் காற்றில் குளிர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்தது. குறட்டை ஒலியும், மனிதர்கள் தாறுமாறாகக் கிடந்து துரங்கும் காட்சிகளும்இரவு நேரத்து இரயிலின் அசதியைக் காட்டின. சென்ற டைய வேண்டிய ஊர் விடிந்ததும் வருகிறார்போல் முந்திய இரவு முழுவதும் பயணம் செய்கிற இரயிலுக்கு ஒரு சோபை உண்டு. விடிகிற வேளையில் உற்சாகத்தில் நாமே ஒடி வந்து அந்த இடத்தை அடைந்து விட்டாற்போன்று மர்யமாகக் காலை அரும்பியதும் அரும்பாததுமாகப் புதுஉளர் வந்து சேரும். முதல் நாள் இரவிற் புறப்பட்ட நகரின் ஒசைகள், உறவுகள், உணர்வுகள் கனவாக ைநந்து மறப்பதற்குக்கூட அவகாசமில்லாததுபோல் மறுநாள் எதிர் வருகிற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இந்த உணர்வை அடைந்திருக்கிறான் சுகுனன்.

இன்று விடிந்தபோது அரக்கோணம் வந்தது. பல் விளக்கிவிட்டு ஸ்டேசன் பிளாட்பாரத்தில் காபி குடித்த பின் சென்னை வருகிற வரை படிக்கலாமென்று அங்கு ஒரு தினசரியைக் கையில் வாங்கிக்கொண்டு மறுபடி இரயிலேறிய சுகுணன்-பத்திரிகையில் கண்பார்வையைச் செலுத்தி னான். பத்திரிகையின் நடுத்தாளை எதிர் nட்டுக்காரர் மெதுவாகக் கேட்டு இரவல் வாங்கி உருவி எடுத்துக்

கொண்டு விட்டார். மற்ற நான்கு பக்கங்களையும் படித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/228&oldid=590605" இலிருந்து மீள்விக்கப்பட்டது