பக்கம்:நெற்றிக்கண்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 227

விட்டு-நடுத்தாளுக்காக அவன் காத்திருக்க வேண்டிய தாயிற்று. திருவள்ளுர் தாண்டுகிறவரை தினசரியின் நடுத்தாள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.

கிடைத்தபோது அதில் அவன் கண்களுக்குத் தெரிந்த முதல் செய்தி அப்படியே அதிர்ந்துபோகச் செய்வதாக இருந்தது. அதைப் படிக்கவே துணியாமல் அவன் நெஞ்சு "திக்திக் கென்று வேகமாக அடித்துக்கொண்டது. இதயத்து உணர்வுகள் விம்மின. குமுறின. 'எப்படி அழாமல் இருக்க முடிகிறது நம்மால்-என்று அவனே தன்னையும் தன் மனத் திடத்தையும் வெட்கத்தோடு கடிந்துகொள்கிற துயரமான அந்தச் செய்தியை முதலில் படிக்க நேர்ந்திருந்ததால் அதற் கப்புறம் அதில் வேறெதையுமே படிக்க அவனுக்கு மனம் ஓடவில்லை. 'இப்படியும்கூட ஒரு துயரம் வருமா?-என்று எண்ணி எண்ணி மனம் உருகி மாயும் செய்தி தெரிந்தது அங்கே. அச்செழுத்துக்கள் கண்களிலிருந்து மறையாமல் "அதுதான் உண்மை', 'அதுதான் உண்மை-என்று எதிரே நின்று கண்களை உறுத்தின. அவனோ கண் கலங்கி மனம் நெகிழ்ந்து உணர்வுதனையிழந்து பதுமைபோல் இரயில் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி இமையாது வீற்றிருந்தான். நிற்காத சில நிலையங்களைக் கடந்து சென்ட்ரலை நோக்கி விரைந்தது இரயில். இதோ ஆவடி அம்பத்துார்கூடக் கடந்தாயிற்று. சென்னை நெருங்குகிறது. இப்படி நடக்குமென்று அவன் ஊர் புறப்படும்போது நினைக்கவில்லை, மனிதனைத் திகைக்க வைக்கும் காரியங் கள் எல்லாம் இப்படித்தான் பேரிடியாய் வந்து நிற்கும் போலிருக்கிறது. - -

அதிர்ஷ்டமே உன் கைகளில் நான் யானை பலம் பெறுகிறேன். ஆனால் துயரமே உன் கைகளில் நான் நலிந்து பலவீனப்பட்டு விடுகிறேன்-என்று நவநீத கவி ஓரிடத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. இரயில் ஒடுவதாகத் தெரியவில்லை. ஊர்வதாகத் தோன்றியது. செய்தித்தாளை நம்பிக்கையில்லாமல் மறுபடியும் எடுத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/229&oldid=590606" இலிருந்து மீள்விக்கப்பட்டது