பக்கம்:நெற்றிக்கண்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2 I

வேறு வேறு எல்லைகளில் மாறி இருந்து அவன் தனக்குள் தீர்மானம் பண்ணவேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும், தனக்கு வேறு ஆதரவுகளும் வேறு நம்பிக்கைகளும், சாசுவதமில்லை-கடைசிவரை சாசுவதம் தன்னுடைய சொந்த நம்பிக்கையும், சொந்த மனமுமே அன்றி வேறல்ல,- என்று இப்படி உணருகிறாற் போல ஒரு நிகழ்ச்சியாவது நிச்சயம் வராமற் போகாதென்று இப்போது சுகுனனுக்குத் தோன்றியது. -

குளித்து விட்டு வந்ததும்-சிந்தனை மேலும் சுறுசுறும் படைந்து மனத்தில் உறைக்கிற மாதிரி-அவளுக்கு-அது தான் அந்தக் கடன்காரி துளசிக்கு ஏதாவது எழுதவேண்டு மென்று சுகுணனுக்குத் தோன்றியது. வெளிப்பார்வைக்கு அது திருமண வாழ்த்தைப் போல் இருந்தாலும்-அவள் கையில் கிடைக்கிறபோது- அவள் அதைப் படிக்கிற போது அவள் இதயத்தைச் சுடும்படி அது இருக்க வேண்டும் என்று தீர்மானம் . பண்ணிக் கொண்டவனாக அந்தத் தீர்மானத்தைச் சில விநாடிகள் கூடத் தள்ளிப் போடப் பொறுக்காத தீவிரத்தோடு உடனே வாட்ச்மேனைக் கூப்பிட்டு, உள்ளூர்த் தபாலாபீஸில் போய் கிரீட்டிங்' பேப்பரும் ஸ்ட்ாம்பும் கவரும்’-வாங்கி வருமாறு கூறிச் சில்லறை கொடுத்தான் சுகுணன்.

அந்த வாட்ச்மேனுக்கு கிரீட்டிங் கவர்- என்ற வார்த்தை வாயில் நுழையவில்லை. ஆகவே ஒரு துண்டுத் தாளில் அதைத் தனியே எழுதிக் கொடுக்க வேண்டிய தாயிற்று. பத்தே நிமிஷத்தில் சைக்கிளில் போய் கிரீட்டிங் கவர் பேப்பர்-ஸ்டாம்பு வாங்கி வந்துவிட்டான் வாட்ச் மேன். கிராமாந்தரத்துத் தபால் நிலையமாகையால் நீண்ட நாட்களாக யாரும் வாங்காமல் பழுப்படைந்திருந்தன. கிரீட்டிங் தாளும் கவரும், - * ,

திருமணம் காலையிலேயே முடிந்திருக்குமென்றால் இந்த வாழ்த்தை 'நேர் பார்வைக்கு என்று உறையில் எழுதி

நெ-2 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/23&oldid=590389" இலிருந்து மீள்விக்கப்பட்டது