பக்கம்:நெற்றிக்கண்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தெற்றிக் கண்

பார்த்தான். பொய்யில்லை; உண்மைதான்! நமக்கும். பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதுமில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவது. மில்லை. ஆசைகள் தமக்குரியவை, ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற, எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது. நினைப்பும் நிகழ்ச்சிக்கும் ஊடே எங்கோ இருக்கிற அந்த. நூலிழை எல்லையில்தான் மனிதர்கள் வெல்லவும் தோற்க வும் முடிகிறது போலும்.

பதின்மூன்றாவது அத்தியாயம்

சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும்தான் போகிறது. ஆனால் அசா தாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது.

நல்லவர்கள் கெடுதலும் அழிவும் அடைந்து நலியும். அதே வேளையில் தீயவர்கள் பயனும் வளர்ச்சியும் பெறுவது. போல் தென்படும் பிரமை நிகழ்ச்சிகள் சில உண்டு. நேஷனல் டைம்ஸ் மகாதேவன் என்ற சிறந்த பத்திரிகை. யாளர் மாரடைப்பினால் திடீரென்று காலமாகிவிட்ட செய்தி, பத்திரிகையின் மரண அறிவிப்புப் பகுதியில தென் பட்டுத் துணுக்குறச் செய்த அதே வேளையில்...பைந்தமிழ். நாவலர், பாண்டுரங்கனாருக்கு , அரசாங்கத்தாரின் அகாதெமிப் பரிசு அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி தெரிந்தது. எத்தனை செய்திகள் தெரிந்தாலும் அவற்றில் கவரப்பட்டுச் செல்லாமல் மகாதேவனின் திடீர் மரணச் செய்தி ஒன்றே சுகுணனின் உணர்வை ஒட்டமறச் செய்து விட்டது. அவருக்காக முந்தைய தினங்களில் உதக மண்டலத்துக்கும் கூலுாருக்கும் இடையிலுள்ள கிராமபோன் வசித் தொழிற்சாலையைப் பார்த்து விட்டு வந்ததையெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/230&oldid=590607" இலிருந்து மீள்விக்கப்பட்டது