பக்கம்:நெற்றிக்கண்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 229

லாம் கழிவிரக்கத்தோடு நினைவு கூர்ந்தான் சுகுணன், காணி நிலத்தை ஏழை உழவன் உழைத்து உழைத்து... உரமாக்கிப் பயிர் செய்தாற்போல் அவர் தனியாக வளர்த்து நிலைநிறுத்திய நேஷனல் டைம்ஸ் இதழையும்துன்பங்களையும் வறுமைகளையும் உடைய அவருடையr பெரிய குடும்பத்தையும் நினைத்துக் கவலையிலாழ்ந்தான் அவன். நினைப்பதற்கே தயங்கி மலைக்கக்கூடிய பெருங் கவலையாய் இருந்தது அது. துன்பப்படுகிறவர்களை எதிர்ப்பதில் மரணமும் அல்லவா முந்திக் கொண்டு நிற்கிறது? மகாதேவனின் மரணம் ஒரு தனி மனிதனின் சாதாரண மரணமாக மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை; ஒரு நல்ல இயக்கத்தின் மரணமாகவும். தோன்றிக் கவலை யிலாழ்த்தியது. நெற்றி வேர்வை நிலத்தில் வழிய உழுது பாடுபட்ட நல்ல உழவன் ஒருவன் அதன் பயனை அடையும் முன் மாண்டுவிட்டதுபோல சுதந்திரச் சிந்தையோடு ஒரு நல்ல பத்திரிகையைத் தொடங்கி வளர்த்தவர், அது ஒளி பெருகி ஓங்கிடக் காணாமல் மாண்டதை எண்ணி எண்ணி வேதனையில் மூழ்கினான் சுகுனன்.

சென்டிரல் நிலையத்தில் இறங்கியபோது அதன் கலகலப்பையும், ஆரவாரத்தையும் உணரக்கூட ஆற்ற வின்றி ஒரு இயந்திரம் போல் வெளியேறி வாடகைக் காரைத் தேடினான் அவன். மனத்தின் துயரமும் தடு மாற்றமும் அவனை நிற்கவும் முடியாமல் புறத்திலும் தள்ளாடச் செய்தன. மகாதேவனைப் போல் தன்மானமும் தன்னம்பிக்கையும் கொண்டு தனியே வெளியேறிப் பத்திரிகை நடத்திய தீரனின் தோல்வியை அல்லது அழிவை எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கும் பெரும் பத்திரிகை முதலாளி களும், எதிரிகளும், பொறாமைக்காரர்களும் இந்த மரணத் துக்காக உள்ளுற எப்படி எப்படியெல்லாம் மகிழ்ந்திருப் பார்கள் என்றெண்ணியபோது அந்த எண்ணத்தையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும்தான்

நெ-15 - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/231&oldid=590608" இலிருந்து மீள்விக்கப்பட்டது