பக்கம்:நெற்றிக்கண்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நெற்றிக் கண் அம்மாள் கண்ணிருக்கிடையே குமுறினாள். அப்போதுள்ள நிலையில் அவர்களிடம் இதைப் பற்றி விசாரித்துப் பயனில்லை என்று உணர்ந்த சுகுணன்-மகாதேவனின் மூத்த பையனைத் தனியே வாயிற் புறம் அழைத்துச் சென்று. விவரங்களை விசாரித்தான். அவனுக்கும் விவரமாக எதுவும்: சரியாகத் தெரியவில்லை.

' கிராமத்திலிருந்து பெரியப்பா வந்திருக்கார்;. காலை யிலேயே டைம்ஸ் ஆபீசுக்குப் புறப்பட்டுப் போனார், இன்னும் திரும்பி வரவிவில்லை. போறதுக்கு முன்னே அம்மாவிடமும் பேசிவிட்டுத்தான் போயிருக்கார். அநேக. மாக மெஷின்மேன், ஃபோர்மென், கம்பாவிட்டர்களுக் கெல்லாம் இன்னிக்கே கணக்குத் தீர்த்துடறதாக ஏற்பாடு. நாளைக்குப் பேப்பர் வரது சந்தேகம். பிரஸ்ஸையும் விற்கச் சொல்லி அம்மா சொல்லியாச்சு'- என்று பையன் இழுத்துப் பேசி நிறுத்தியபோது சுகுணன் அப்படியே. திகைத்து நின்றுவிட்டான். *... -

அந்த ஏற்பாடு மகாதேவனுடைய ஆன்மாவையும். கொன்றுவிடும் போலிருந்தது. .

எங்கேயாவது அடங்கி வேலை பார்த்தாலும் பார்த். திருக்கலாம். மகாதேவன் பத்திரிகை தொடங்கி அதிலேயே செத்துத் தொலைந்தார்! பத்திரிகையும் செத்தது'-என்ற: மானக் குறைவான பேச்சு இந்த உலகில் எழாமல் உயிரைக் கொடுத்தாவது தடுத்துவிட வேண்டுமென்று அவன் தவித். தான். ஒரு நல்ல பத்திரிகையாளனின் ம ன த் ைத. இன்னொரு நல்ல பத்திரிகையாளன்தான் புரிந்து கொள்ள முடியும். மகாதேவனின் அகால மரணத்தைவிடக் கொடுமை. யானது அவருடைய பத்திரிகையின் நிர்பந்தமான மரணம். என்பதை அவன் உயிர்த் தவிப்போடு உணர்ந்தான். துடித்தான். - - ; : .

கடைசி நல்ல எழுத்தாளனால்கூட ஒரு பத்திரிகையை இந்த நாட்டில் வெற்றிகரமாக நடக்கும்படி நிலைநாட்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/234&oldid=590611" இலிருந்து மீள்விக்கப்பட்டது