பக்கம்:நெற்றிக்கண்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 233

விட்டுப் போக முடியவில்லை-என்ற அவநம்பிக்கையான் எண்ணம் பொதுமக்களிடம் நிலைத்துவிடவே இது உதவும் என்று அவனுக்குத் தோன்றியது. மகாதேவனுக்குத் தான் செய்யவேண்டிய மிகப்பெரிய மரியாதை அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விடாமல் காப்பதுதான் என்று அவனுக்குப் புரிந்தது. உள்ளே ஓடினான். மகாதேவனின் மனைவியிடம் இலட்சியத்தைச் சொன்னால் அந்தத் துக்க வேளையில் அது புரியாது என்பது அவனுக்குத் தெரியும். எனவே இலாப நஷ்டக் கணக்கைத் தொடங்கிப் பத்திரிகையைக் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தாமலிருப்பது பல வகையிலும் இலாபம் தரும் என்பதுபோல் பிடிவாதமாக வாதிட நினைத்தான் அவன். அந்த முயற்சியிலும் முதலில் தோல்வியே கிடைத்தது. அவன் கூறியது அவர்களுக்குப் புரியவில்லை.

"பேப்பருக்குக் கடன், மைக்குக் கடன், இட, வாடகை நிறைய பாக்கி நிற்கிறதாம்...நான், பெண் பிள்ளை. தனியர் எப்படி இதையெல்லாம் அடைக்க முடியும். அப்படியே நடத்தினாலும் அவர் உயிருக்கே எமனாக முடிந்ததுஎன்னை மட்டும் வாழ வச்சிடப் போறதா என்ன?’ என்று தீர்மானமாக மறுத்தாள் அந்த அம்மாள். அப்புறமும் பொறுமை இழக்காமல் அந்த அம்மாளோடு விவாதித்தான்

சுகுணன். -

"இவ்வளவு கடனும் இருப்பதால்தான் அதைத் தொடர்ந்து நடத்துவது நல்லதென்கிறேன். அவர் அரும் பாடுபட்டுப் பத்தாயிரம் ரூபாய்வரை விளம்பரங்கள் சேகரித்த இண்டஸ்டிரியல் ஸ்ப்ளிமெண்ட்’ அரைகுறை யாகக் கிடக்கிறது. பத்திரிகை நின்று விட்டாலோ அவ்வளவும் வீண். நடந்தால் இவ்வளவு கடனும் அடையும். அவருடைய ஆசையும் அழியாது. நல்ல காலமும் விரைவில் பிறக்கும். தயவு செய்து இதில் என்னை நம்பி விட்டு விட்டால் உங்களுக்கு நான் நாளை நிச்சயமாக நல்ல பதில் சொல்ல முடியும்,' என்று மன்றாடினான் சுகுணன். இறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/235&oldid=590612" இலிருந்து மீள்விக்கப்பட்டது