பக்கம்:நெற்றிக்கண்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நெற்றிக் கண்

யில் ஒரு வழியாக அந்த அம்மாள் மனமிரங்கியது. பையல் னிடம் விவரம் சொல்லிச் சுகுணனோடுகூட அனுப்பினாள். சுகுணன் மகாதேவனின் மூத்த பையனோடு தம்புச்செட்டித்தெருவிலிருந்த டைம்ஸ் காரியாலயத்துக்கு விரைந்தான். அங்கே மகாதேவனின் சகோதரருக்கும் தொழிலாளர்களுக் கும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பேச்சு ஒரு முடிவுக்கு வரவில்லை. சுகுணனைக் கண்டதும் தொழிலா ளர்கள் முகமலர்ச்சியடைந்தனர். *

'சார் நீங்களே சொல்லுங்க... ஐயா அரும்பாடுபட்டு வளர்த்ததை ஒரே நாளில் இழுத்து மூடிப்பிட்டு எங்களை யெல்லாம் தெருவிலே நிறுத்திடறது உங்களுக்கே சரியாப்படுதா? -என்று சுகுணனைக் கேட்டார்கள் ஃபோர்மேனும் பிற தொழிலாளர்களும். இதற்குள் மகாதேவனின் மகன் பெரியப்பாவை உள்ளே தனியாக அழைத்துச்சென்று. ஏதோ விவரம் கூறவே அவர் திரும்பி வந்து சாவிக் கொத்தைச் சுகுணனிடம் கொடுத்துவிட்டு, "சார்! இனி: மேல் உங்கபாடு. பேசித் தீர்த்துக்குங்க-என்றார்.

"தீர்ப்பதற்கு ஒன்றுமில்லை. போனவருக்கு நாம் செய்கிற பெரிய மரியாதை அவர் நம்பிக்கையைத் தொடர்ந்து செயலாக்குவதுதான்'-என்றான் சுகுணன்.

அடுத்த கணம் டெவிபிரிண்டர் ஒலி சுறுசுறுப்பாக இயங்கியது. அச்சுக் கோர்ப்பவர்கள் விரைந்தார்கள். சுகுணன் கம்போஸுக்குச் செய்தியைத் தயாரித்துக் கொடுப் பதில் ஈடுபட்டான். இன்னொருபுறம் இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்டுக்கான வேலைகளும் தொடர்ந்தன.

"மகாதேவனின் மறைவு பற்றியும் இதற்குப் பின்னும் அவரை நன்றாக நினைவு கூற ஒரே வழி அவருடைய பத்திரிகைதான் என்பதைப் பற்றியும், சுகுணனே உருக்க: மாக ஒரு தலையங்கம் எழுதினான். பம்பரமாகக் காரியங். களைச் செய்து அன்று மாலையில் வெளியாகவேண்டிய சிடி எடிஷனையும் அனுப்பி வெளியூர்ப் பார்ஸல்களையும். அனுப்பி முடித்தபோது சுகுணன் களைத்துப் போயிருந்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/236&oldid=590613" இலிருந்து மீள்விக்கப்பட்டது