பக்கம்:நெற்றிக்கண்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 235 .

தான். ஆனாலும் தலைசிறந்த இலட்சியவாதி ஒருவர் தொடங்கிய பத்திரிகை ஒருநாள் கூட நிற்காமல் வெளிவந்து விட்டது என்ற பெருமிதம் மனத்தில் இருந்தது. பத்திரிகை நிச்சயமாய் நின்றுபோய்விடும் என்று எதிர்பார்த்திருந்த பணப் பெருச்சாளிகளுக்கு அது பெரிய அதிர்ச்சியாகவும் இருந்தது. களைப்போடு அன்றிரவு அவன் அறைக்குத் திரும்பும்போது-வழியில் தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலையைப் பார்க்க நேர்கையில் மகாதேவனை நினைத்து. ஒரிரு கணங்கள் கண் கலங்கினான். அப்படிக்கலங்கியபோது, அந்தச்.சிலை திகைத்து நிற்பது போலிருந்தது. பத்திரிகை நடத்தி வெற்றிகாண வேண்டுமென்ற வைராக்கியத்தோடு: மறுபடி நிமிர்ந்து திடமாகப் பார்த்தபோது அந்தச் சிலை விரைவாக நகர்வது போலவும் இருந்தது. ஒருநாள் இரவு பிராட்வேயிலிருந்து நடந்தே வீடு திரும்பும்போது இந்தச் சிலையைக் காண்பித்து மகாதேவன் தன்னிடம் கூறிய வாக்கியங்கள் அவனுக்கு இப்படியே நினைவு வந்தன.

'கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஒடியாடி அலைந்து கொண்டிருக்கும்போது -இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாக. மாய் ஒடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கும்போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஒடுகிற சிலைஇது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான்:- - இந்த வாக்கியங்கள் இவற்றைச் சொல்லிவிட்டுப் போனவரின் மறைவுக்குப்பின் இப்போது இன்னும் அதிகப் பொருள் நிறைவுள்ளவையாகத் தோன்றின அவனுக்கு.

காலையில் இரயிலிலிருந்து இறங்கியதும் நேரே ஐஸ். ஹவுஸ் பகுதியிலிருந்த மகாதேவனின் வீட்டுக்குப் போய் அங்கிருந்து அப்படியே தம்புச்செட்டித் தெருவில் போய் அன்றைய டைம்ஸ் வெளிவர ஏற்பாடுகள் செய்வதில் முனைந்து விட்டதன் காரணமாகச் சுகுணனுக்கு-நீரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/237&oldid=590614" இலிருந்து மீள்விக்கப்பட்டது