பக்கம்:நெற்றிக்கண்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 - நெற்றிக் கண்

டவோ, உடை மாற்றிக் கொள்ளவோ கூட நேரமில்லை. அதனால் இரவில் அறைக்குத் திரும்பியதும் வேர்வையடங்க நெடுநேரம் ஷவரில் நின்றான் அவன். தலையில் குளிர்ந்த தண்ணிர் இறங்கியதும் சிந்தனை சுறுசுறுப்படைந்தது. மகாதேவன் விட்டுச் சென்ற நேஷனல் டைம்ஸ்'ஐ எப்படி எல்லாம் வளர்த்து ஒரு சுதந்திரச் சிந்தனையாளனின் வெற்றியாக அதை இந்த நாடடுக்கு நிரூபிக்கவேண்டும்’என்பதைப் பற்றி எண்ணலானான் சுகுணன். டைம்ஸின் முதல் இதழில் சுதந்திரச் சிந்தனையாளர்கள் பத்திரிகை தொடங்குவதைப் பற்றியும் அவர்கள் வெல்வதையும் தோற்பதையும் பற்றியும் குறிப்பிடும்போது கூட. -

"எங்கள் போர்க்களம் மிகவும் சிறிது. வசதிகளாலும் கருவிகளாலும் குறைவுடையது. இதில் சிலர் மடியலாம். சிலர் அழியலாம். சிலர் தளரலாம். சிலர் தோற்கலாம். ஆனால் இன்று தோற்கும் ஒவ்வொரு நல்ல தோல்வியும் நாளை வெல்ல வேண்டுமென்று துடிக்கும் பல்லாயிரம் பேனா வீரர்களை உண்டாக்கிவிடுகிற சத்தியமான தோல்வியாக இருக்குமே ஒழிய ஒரேயடியாக ஒடுங்கச் செய்து விடுகிற ஊமைத் தோல்வியாக இருக்கவே இருக் காது. எங்களைவிட வசதிகளும் கருவிகளும் உள்ளவர்களை வெல்வதற்கு எங்களிடம் மனோபலம் மட்டும்தான் இருக் கிறது. நாங்கள் தளரும்போது எங்களைப் போலவே மனோபலமுள்ள ஆயிரமாயிரம் வீரர்கள் எங்களைத் தொடர்ந்து இந்தக் களத்தில் போரிடுவார்கள் என்ற தம்பிக்கையைப் படைக்க முடியுமானால் அதுவே எங்கள் சாதனையாக இருக்கும்.’’

-என்று உணர்வு பொங்கப் பொங்க ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அப்போது, இந்த முதல் இதழ் வாக்கியங் களைப் பலமுறை படித்துப்படித்து மனப்பாடமேசெய்திருந்: தான் சுகுணன்.' அப்போது 'நேஷனல் டைம்ஸின்' ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய தலையங்கங்களைப் படித்து இரங்கிய வேகத்தில்-நகரின் பல பகுதிகளில் எங்கெங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/238&oldid=590615" இலிருந்து மீள்விக்கப்பட்டது