பக்கம்:நெற்றிக்கண்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி - 237

யணிபுரியும் பல்லாயிரக்கணக்கான கம்பாஸிட்டர்களி லிருந்து - புரூப் ரீடர்கள் வரை எல்லாரும் தினசரி "டைம்ஸ்' வாங்குவதை ஒரு நோன்பாகக் கொண்டிருந் தார்கள் என்பதையும் சுகுணன் அறிந்திருந்தான். அப்படி ஒரு சுய கெளரவத்தையும்-தன்னம்பிக்கையையும் படைத்த வருடைய முயற்சியை வெல்லச் செய்வதில் அதே விதமான சுயகெளரவமும் தன்னம்பிக்கையும் உள்ள அடுத்த தலை முறைப் பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்கும் இன்று பெரும் பங்கு உண்டென்று எண்ணி விரதம் பூண்டது அவன் உள்ளம்.

அவன் நீராடி உடை மாற்றிக் கொண்டு அறையைப் பூட்டியபின் சாப்பாட்டுக்காக மெஸ்ஸிற்குப் புறப்பட்ட போது, அப்போதுதான் அவன் ஊரிலிருந்து திரும்பியதைக் கவனித்த அறைப் பையன் அவன் ஊரில் இல்லாத நாட் களில் அவனைத் தேடி வந்தவர்களைப் பற்றிய விவரங் களை ஒடி வந்து தெரிவித்தான். பையன் கூறியதிலிருந்து சுகுணனிடம் கைமாற்றாகப் பணம் வாங்கிக் கொண்டு போயிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இரண்டு முறை யும் துளசி நான்கு முறையும் அவனைத் தேடி வந்திருப்ப தாகத் தெரிந்தது. வேறு சில நண்பர்களும் தேடி வந்திருந் தார்கள். டெல்லியில் நடைபெற இருக்கும் அகில இந்தியப் பத்திரிகையாளர் சங்க மாநாட்டு அழைப்பிலிருந்து பாண்டுரங்கனாரின் உள்ளுர்க் கந்த புராணப் பிரசங்க அழைப்புவரை அழைப்புக்களும் கடிதங்களுமாக ஒரு கொத்துத் தபால்களும் அறைக்குள் விழுந்து கிடந்தன. அவற்றை உடனே பார்க்கும் சுறுசுறுப்பும் ஆர்வமும்கூட அன்றைய மனநிலையில் அவனிடம் இல்லை.

யாராவது முக்கியமானவர்கள் தேடிவந்து அவசியம் பார்த்தாக வேண்டுமென்று வற்புறுத்தினால் மட்டும் இந்த விலாசத்தையோ ஃபோன் நம்பரையோ அவர்களுக்குக் கொடு. இனிமேல் என்னை இங்கே அறையில் பார்ப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/239&oldid=590616" இலிருந்து மீள்விக்கப்பட்டது