பக்கம்:நெற்றிக்கண்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.38 நெற்றிக் கண்

சிரமம். எப்போதாவதுதான் வருவேன். சில சமயம் இரண்டொரு நாள் வராமலே இருக்கும்படியும் ஆகிவிடும்

-என்று பையனிடம் நேஷனல் டைம்ஸ் விலாசத்தையும்

ஃபோன் நம்பரையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன்.

பார்லிமெண்டில் ஏதோ ஒரு முக்கியமான பட்ஜெட. விவாதம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்தச் சமயத்தில் ஒரு தினசரியின் கடமைகளும், சுறுசுறுப்பும் அதிகமாக இருக்கவேண்டும். ஆதலால் பத்திரிகை தாமத. மாக வருவதோ, உரிய புதுச் செய்திகள் வெளிவராமல் மற்றப் பத்திரிகைகளின் முந்திய பதிப்பில் வந்ததையே மாற்றித் திரித்து வெளியிடுவதாக அமைவதோ பேரையே கெடுத்துவிடும். டைம்ஸில் மகாதேவன் இத்தனை ஆண்டு களாகக் காப்பாற்றி வந்த பத்திரிகைத் தரம் சிறிதுகூட இறங்கிவிடக் கூடாதென்று அக்கறை செலுத்துவதில் சுகுணன் மிகவும் கவனமாயிருந்தான். அதனால் மறுநாளி விருந்து இயலுமானால் "நேஷனல் டைம்ஸ்' காரியாலயத் திலேயே தங்கி இராப் பகலாக உழைக்கக் கருதியிருந்தான் அவன். தன்னுடைய இளமையும், உழைக்கும் ஆற்றலும் அந்தப் பத்திரிகையை நிலை நிறுத்துவதற்காகவே அர்ம்பணிக்கப்பட வேண்டும் என்பது அப்போது அவன் வைராக்கியமாகவும்-இன்னும் அழுத்தமாகச் சொல்லப் புகுந்தால் ஒரு வெறியாகவுமே இருந்தது. அந்தச் சமயங் களில் அவனுக்கு வேறெவையுமே நினைவில் இல்லை. ஊரி" விருந்து திரும்பியதும் ஞாபகமாகத் தனக்குத் தெரிவிக்கச் சொல்லியிருந்த் துளசியைப் பற்றி விசாரிப்பதையும் அவன் மறந்தான். அவள் சிலமுறை தேடிவந்ததாகவும் பலமுறை. ஃபோன் செய்ததாகவும் லாட்ஜ் பையன் தெரிவித்தும் அவன் அதற்கு இரங்கவோ உருகவோ முடியாமல் வேறு. கவலைகளும் தாகங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன. கோவையிலிருந்து செளக்கியமாகத் திரும்பியதற்குத் தங்கைக்கு ஒரு கடிதம் எழுத எண்ணியும் அதைச் செய்து முடிக்கவில்லை. பூம்பொழிவிலிருந்து தனக்கு வரவேண்டிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/240&oldid=590617" இலிருந்து மீள்விக்கப்பட்டது