பக்கம்:நெற்றிக்கண்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 239

பிராவிடண்டு ஃபண்டு முதலிய தொகைகளையும். தன்னுடைய புத்தகங்கள் விற்ற வரவிலிருந்து சேமித்து வைத்திருந்த ஒரு பெருந் தொகையையும், ரெக்கரிங் டிபாஸிட்'டில் போட்டிருந்த தொகையிலிருந்து எடுத்த ஒரு தொகையையும் திரட்டி முழு மூச்சாக மகாதேவனின் "டைம்ஸி'ல் முதலீடு செய்து அதை நிலை நிறுத்திவிடத் - திட்டமிட்டிருந்தான் அவன், துரதிருஷ்டவசமாக அவன் திரட்டிய தொகையில் முன்பே மகாதேவனிடம் அவரிருந்த போது தந்ததுபோக மீதமுள்ள தொகை முழுவதும் டைம்ஸுக்கு ஏற்கெனவே இருந்த கடன்களை அடைக்கவே சரியாயிருக்காது போல் தோன்றியது. சூரியன் மறைந்: ததும் இருள் சூழ்வதுபோல் மனிதன் மறைந்ததும் "இனிமேல் திரும்பிப் பணம் வருமோ வராதோ-என்ற பயத்தில் கடன்காரர்கள் சூழ்ந்துகொண்டு ஒரே சமயத்தில் நெருக்கும் பாவத்துக்கு ஈடு ஏது? அந்தக் கடன் கொடுமை யும் டைம்ஸுக்கு இருந்தது. டைம்ஸ் நின்று விடாமல் வெளிவரவேண்டிய பொறுப்பைச் சுமக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களிலேயே சுகுணனுக்கு இந்தச் சூழ். நிலை நன்கு தெரிந்துவிட்டது. ஆனாலும் அவன் தளர வில்லை. மகாதேவனின் குடும்பத்தாரைக் கலந்: தாலோசித்த பின் நிறுவியவர் மகாதேவன் என்ற பெயரைப் பத்திரிகைப் பெயரின் கீழே அச்சிட்டு விடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு மற்றப் பொறுப்புக் களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு 'நேஷனல் டைம்ஸ் தொடர்ந்து வெளிவரப் பொதுமக்கள் ஆதரவைக் கோரி உருக்கமான அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டான்

"எங்கள் போர்க்களம் மிகவும் சிறியது. வசதிகளாலும் கருவிகளாலும் குறைவுடையது'-என்று தொடங்கி மகா தேவன் டைம்ஸ் முதல் இதழில் வெளியிட்டிருந்த வாக்கியங் களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தான் அவன். சுகுணனின் கதைகளாலும், நாவல்களாலும் கட்டுண்டு. மயங்கிய வாசகர்கள் தமிழகத்திலும் கடல் கடந்த நாடு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/241&oldid=590618" இலிருந்து மீள்விக்கப்பட்டது