பக்கம்:நெற்றிக்கண்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நெற்றிக் கண்

களிலும் நிறைய இருந்தார்கள். அவர்கள் இந்த அறிக்கை யால் பெரிதும் கவரப்பட்டிருப்பது அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து வந்த ஆதரவுக் கடிதங்களாலும், செக்' மணி ஆர்டர்களாலும் நிரூபணமாயிற்று. சில்ர் தங்க மோதிரங் களையும், பொன் வளையல்களையும், பொற் சங்கிலிகளை யும், சவரன்களையும் கூட நிதியாக டைம்ஸுக்கு அனுப்பி பிருந்தார்கள். மற்றப் பத்திரிகையாளர்கள் வியக்கும்படி பும், அதிசயிக்கும்படியும்.-ஏன்-பொறாமைப்படும்படியாக வும், இருந்தது இந்த அன்பு வெள்ளம். - -

கொழுத்த பணப் பெருச்சாளியால் நடத்தப்படும் எதிர்த் தரப்புப் பத்திரிகை ஒன்று மனம் வெந்து புகைச்ச லெடுத்து-"டைம்ஸ் பிச்சை எடுக்கிறது'-என்பதுபோல் ' குறிப்பாகக் கிண்டல் செய்து எழுதி இதைக் கேலி செய்த போது, பிச்சை எடுக்கக்கூட யோக்கியதை இல்லாதவர்கள் எழுதிய வாக்கியம் இது என்று தலைப்பிட்டு அந்தப் பகுதி யையும் டைம்ஸிலேயே எடுத்துப் போட்டான் சுகுணன். அதனாலும் டைம்ஸ் வாசகர்களின் அதுதாபம் பெருகிற்றே ஒழியக் குறையவில்லை. காலை, மாலை வேளைகளில் அவனுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவ உழைக்கப் பல நண்பர்கள் தேடி வந்தனர். டைம்ஸ்’ அலுவலகம் எப்போதும் கலகலவென்றிருந்தது. முன்பு அவனிடம் பண உதவி பெற்று அந்த நன்றி நிறைவோடிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இலவச டைப்பிஸ்டாக வந்து காலை மாலை வேளைகளில் அலுவலக சம்பந்தமான கடிதங்களை முத்து முத்தாக அடித்து அனுப்பினாள். மனிதர்களின் உண்மை அன்பில் டைம்ஸ் ஓர் சத்திய இயக்கமாக வளர்ந் தது. வெளியிடப்பட்ட 'இண்டஸ்ட்ரியல் லப்ளிமெண்டின்வருமானம் சிறிது காலம் தாக்குப் பிடித்தது. மகாதேவனின் குடும்பத்துக்கு மாதம் முதல்தேதி பிறந்ததும் ஐநூறு ரூபாய் உதவித் தொகை கொடுக்க ஏற்பாடு செய்து மிகவும் சிரம .மான நிலைகளிலும் அந்த ஏற்பாட்டைத் தேதி தவறாமல் நாணயமாகக் காப்பாற்றிவந்தான் சுகுணன். மகாதேவனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அந்தக் குடும்பத்தாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/242&oldid=590619" இலிருந்து மீள்விக்கப்பட்டது