பக்கம்:நெற்றிக்கண்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 241

இப்போது அவன்மேல் ஒரு சகோதர பாசமும் நம்பிக்கையும். பெருகியிருந்தது. அந்த உழைப்பின் வேகத்திலும், அளவுக்கு மீறிச் சுற்றித் திரிந்து அலைய நேர்ந்ததிலும் சுகுணன் கறுத்து இளைத்துப் போயிருந்தான். வேளா வேளைக்குச் சரியாக உண்ண முடியாது போயிற்று. பல வேளைகளில் 'உண்ண வேண்டிய வேளை இது என்பதை நினைவுகூற வும் முடியாமல் வேறு வேலைகளில் மூழ்கி இருக்கும்படி நேர்ந்தது. துளசியை மட்டும் அவன் சந்திக்கவே முடிய வில்லை. கண்ணாடியில் எப்போதாவது முகத்தைப் பார்க் கும்போது கறுத்து இளைத்திருப்பது நினைவு வந்தால், "இந்த நிலையில் துளசி தன்னைப் பார்த்தால் மிகவும். வேதனைப்படுவாள்'-என்பதும் சேர்த்தே நினைவு வரும். அவள் ஊரில் இல்லையா, இருக்கிறாளா என்பதைக்கூட அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்துகொள் வதற்கு ஒய்வும் வாய்ப்பும் கூட இல்லை. ஊரில் இருந்தால் துளசி துரத்தித் துரத்தித் தனக்கு ஃபோன் செய்வாள். என்பதும் தவறாமல் ஞாபகம் வந்தது. அவளால் எங்கிருந்: தாலும் தன்னைத் தேடி வராமல் இருக்க முடியாது என் பதையும் அவன் நினைவு கூர்ந்தான். மனிதனுக்குள்ளே மூலாதாரமாக மறைந்து கிடக்கிற நெஞ்சக் கனல் அன்பி" னால்தான் ஜ்வலிக்கிறது என்பதை உணர்வது போல் அத்தனை பரபரப்பான வேலைகளிடையேயும், "துளசி வரவில்லை"-"துளசி ஃபோன் செய்யவில்லை-என்பதை அந்தரங்கமாக நினைப்பதிலிருந்து தன்னை அவனால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அது ஒரு ஞாபகமாகவும் ஏக்கமாகவும் கூட இருந்தது. ஆயிரம் பேர் துணை நிற்கிறார்கள், உதவுகிறார்கள், அன்பு செய்கிறார்கள் என்பதில் எல்லாம்கூட திருப்தி காண்கிற மனித மனம்-ஆன்மாவோடு க்லந்து விட்டாற். போன்ற யாரோ ஒருவர் துணைநிற்க வாவில்லையே என்ப: தற்காக ஏங்குகிற இந்த அந்தரங்கத்தைஎண்ணி வியந்தான் ஆகுணன். ஒவ்வொருவனுடைய மனத்தையும் அவனுடைய வாழ்க்கை முழுவதும் இப்படி ஏங்க வைப்பதற்கு யாராவது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/243&oldid=590620" இலிருந்து மீள்விக்கப்பட்டது